காவல்துறை குறைதீர்க்கும் கூட்டத்தில் 82 பேர் புகார் மனு
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்த 10 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 72 மனுதாரர்கள் என மொத்தம் 82 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.







