கோவில்பட்டி கல்லூரியில் உலக சகோதரத்துவ தினம்
கோவில்பட்டி கிளை விவேகானந்த கேந்திரம் சார்பாக 2025 S.S.துரைச்சாமி நாடார் கலை அறிவியல் கல்லூரியில் உலக சகோதரத்துவ தினம் கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் செல்வராஜ் தலைமை தாங்கினார். , கல்லூரி தமிழ் துறைத் தலைவர் செல்வம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.விவேகானந்த கேந்திரம் கோவில்பட்டி கிளை பொறுப்பாளர் பரமகுரு உலக சகோதரத்துவ தினம் பற்றி மாணவர்களுக்கு விளக்கினார்.

தொடர்ந்து மாணவர்களிடையே வினாடி வினா நிகழ்ச்சி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள். விழா தொடக்கத்தில் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் கனகவல்லி வரவேற்று பேசினார். உதவி பேராசிரியர் மகாலக்சுமி நன்றி கூறினார்.







