கரூரில் நாளை திமுக முப்பெரும் விழா; பிரமாண்ட ஏற்பாடு
தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றும் செப்டம்பர் மாதம் நிகழ்ந்துள்ளது என்பதால், இம்மூன்று நிகழ்வையும் சேர்த்து, ஆண்டுதோறும் திமுக சார்பில் முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு திமுக முப்பெரும் விழா கரூர் கோடங்கிபட்டியில் நாளை (17.9.2025) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. விழாவில் கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி வரவேற்று பேசுகிறார். அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் விழாவுக்கு தலைமை தாங்குகிறார்.

முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று திமுக மண்டலங்களில் ஒன்றிய, நகரம், பேரூர், பகுதி ஆகியவற்றில் கட்சிப்பணியில் சிறப்பாக செயல்படும் தலா ஒருவருக்கு நற்சான்று மற்றும் பணமுடிப்பு வழங்கி பேசுகிறார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். மேலும், கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மை செயலாளர் கேஎன் நேரு, , துணை பொதுச் செயலாளர்கள் கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.
இந்த விழாவில் 2 லட்சம் பேர் வரை பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, 50 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
விழாவில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருது, பாளையங்கோட்டை முன்னாள் நகர்மன்ற தலைவரும், தணிக்கை குழு முன்னாள் உறுப்பினருமான சுப. சீத்தாராமனுக்கு அண்ணா விருது, அண்ணாநகர் முன்னாள் திமுக பகுதி செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான சுப. சீத்தாராமனுக்கு அண்ணா விருது, அண்ணாநகர் முன்னாள் திமுக பகுதி செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான சோ.மா. ராமச்சந்திரனுக்கு கலைஞர் விருது வழங்கப்படுகிறது.
மேலும், கட்சியின் மூத்த முன்னோடி தலைமை செயற்குழு உறுப்பினர் நினைவில் வாழும் குளித்தலை சிவராமனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது, கட்சியின் ஆதிதிராவிடர் நலக்குழு தலைவரும், சட்டமன்ற முன்னாள் கொறாடவுமான மருதுார் ராமலிங்கத்துக்கு பேராசிரியர் விருது, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலுார் நா. பழனிச்சாமிக்கு மு.க. ஸ்டாலின் விருது வழங்கப்படுகிறது.







