147-வது பிறந்தநாள்: கோவில்பட்டியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி ஒழிப்பிற்காகவும், பெண் விடுதலைக்காகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் போராடிய தந்தை பெரியார் 147-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக பெரியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் தந்தை பெரியார் சிலை முன்பு சமூக நீதி உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லய்யா, மோகன், ஞானம், இந்திய கலாச்சார நட்புறவு கழக மாவட்ட துணை செயலாளர் அபிராமி முருகன்,
மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி செண்பகராஜ், உலக திருக்குறள் கூட்டமைப்பு முத்துச்செல்வம், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மேரிஷீலா, அன்னலட்சுமி, மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார், முத்துராஜன், தர்மம் வெல்லும் அறக்கட்டளை பூலோகப்பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.







