தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2024-25) பெய்த கனமழையில் கயத்தாறு வட்டம் கடம்பூர் பிர்கா, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிட்டாரம் வட்டங்களில் உளுந்து, பாசி ஆகியவை முற்றிலும் செடியிலேயே முளைத்துவிட்டது. சின்ன வெங்காயம், மிளகாய் செடிகள் அழுகின. மேலும், மக்காச்சோளம் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் சேதமடைந்தன. சேதமடைந்த பயிர்களுக்கு முழுமையான நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்தும், 2024-25-ம் ஆண்டு கனமழையால் […]
தமிழ்நாடு முக்குலத்தோர் அமைப்பு சாரா, அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், தொடர்ந்து அவர்கள் துணை வட்டாட்சியர் உமாதேவியிடம் வழங்கிய மனுவில் கூறி இருந்ததாவது:- கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடந்த 2002-ம் ஆண்டு 280 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. அந்த பட்டாக்களில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த 29.1.2017 அன்று சக்கம்மாள்புரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த வைணவப்பெருமாள் மகன் பாலமுருகன் (வயது 38) என்பவரை, ஏரல் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் வைத்து முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார், இந்த கொலை வழக்கில், ஏரல் சேர்வைக்காரன்மடம் பகுதியைச் சேர்ந்த யோகராஜ்(51) மற்றும் வள்ளியூரைச் சேர்ந்த சுடலைமணி(52) ஆகிய 2 பேரையும் ஏரல் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் […]
தவெக தலைவர் விஜய், 13-ந்தேதி தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்க இருக்கிறார். இதற்கான அனுமதி கோரி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அக்கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விண்ணப்பித்திருந்தார். ஆனால், விஜயின் சுற்றுப்பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து விஜயின் சுற்றுப்பயணத்துக்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி டிஜிபி அலுவகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் விஜயின் சுற்றுப்பயண பற்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது,. அதன் விபரம் வருமாறு; 13-9-2025 […]
நேபாளத்தை ஆட்சி செய்து வரும் கே.பி.சர்மா ஒலி அரசு, நாட்டில் சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. அதாவது நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் அனைத்து சமூக வலைதளங்களும் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதற்காக 7 நாட்கள் கெடு விதித்து கடந்த மாதம் 28-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அரசின் இந்த உத்தரவை ஏற்று பல சமூக ஊடகங்கள் பதிவுக்கு […]
தோல்வி பயத்தால் காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள்; திமுக
தவெக தலைவர் விஜய், 13-ந்தேதி தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்க இருக்கிறார். இதற்கான அனுமதி பெறுவதற்காக புஸ்ஸி ஆனந்த் வந்திருந்தபோது அவரை வரவேற்பதற்காக ஏராளமான த.வெ.க. தொண்டர்கள் விமான நிலையத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் புஸ்ஸி ஆனந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக […]
கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு முதலமைச்சர் விருது; போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான்
தமிழ்நாடு அரசு மாவட்ட/மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையங்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து “தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது ” வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான விருதை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர். நவநீதகிருஷ்ணன் சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் 6-ந் தேதி நடந்த நிகழ்ச்சியின் போது […]
அஜித் குமார், திரிஷா உள்பட பலர் நடித்து கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் இளையராஜாவின் இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக் குருவி ஆகிய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.இதனிடையே, குட் பேட் அக்லி திரைப்படத்தில் தனது இசையில் ஏற்கனவே வேறு திரைப்படங்களில் வெளியான 3 பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியுள்ளதாகக்கூறி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை […]
ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மலையாளிகள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் சார்பில் சமீபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில், பங்கேற்க வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் பிரபல கேரள நடிகை நவ்யா நாயர் ஆஸ்திரேலியா சென்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் ஒரு தகவலை வெளியிட்டார்., அவர் பேசியதாவது:- நான் ஆஸ்திரேலியா புறப்பட்டபோது எனது தந்தை மல்லிகைப்பூ வாங்கிக் கொடுத்தார். அதை நான் 2 துண்டுகளாக வெட்டி ஒன்றை தலையில் வைத்துக்கொண்டேன். மற்றொன்றை கைப்பையில் வைத்திருந்தேன். கொச்சியில் புறப்பட்ட […]
தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோவில்பட்டி காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி வளாகத்தில் நடந்த முழு சந்திர கிரகணத்தை காணும் முகாமில் டெலஸ்கோப்பில் முழு சந்திர கிரகணத்தை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கண்டு வியந்தனர். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால் பூமியின் நிழல் சந்திரனில் விழுகிறது. இது ஒரு இயற்கையான நிகழ்வு ஆகும். நேற்று இரவு 9.57 மணிக்கு சந்திரகிரகணம் தொடங்கியது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் […]







