• March 6, 2026

கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு முதலமைச்சர் விருது; போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் பாராட்டு  

 கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு முதலமைச்சர் விருது; போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் பாராட்டு  

தமிழ்நாடு அரசு மாவட்ட/மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையங்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து “தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது ” வழங்கி வருகிறது.

அந்த வகையில்  கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான  விருதை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர். நவநீதகிருஷ்ணன் சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் 6-ந் தேதி நடந்த நிகழ்ச்சியின் போது  காவல்துறை தலைமை இயக்குனரிடம் இருந்து பெற்றார்.
விருது பெற்ற கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தின் ஆய்வாளர்நவநீதகிருஷ்ணன் மற்றும்  சார்பு ஆய்வாளர்களை இன்று (8.09.2025) தூத்துக்குடியில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் பாராட்டி எப்போதும் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்தினார்.

கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் உடனிருந்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *