கோவில்பட்டியில் முழு சந்திரகிரகணத்தை டெலஸ்கோப்பில் பார்த்து வியந்த பொதுமக்கள்
தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோவில்பட்டி காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி வளாகத்தில் நடந்த முழு சந்திர கிரகணத்தை காணும் முகாமில் டெலஸ்கோப்பில் முழு சந்திர கிரகணத்தை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கண்டு வியந்தனர்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால் பூமியின் நிழல் சந்திரனில் விழுகிறது. இது ஒரு இயற்கையான நிகழ்வு ஆகும்.
நேற்று இரவு 9.57 மணிக்கு சந்திரகிரகணம் தொடங்கியது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோவில்பட்டி காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி வளாகத்தில் முழு சந்திர கிரகணத்தை காணும் முகாமை நடத்தியது.
பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் டெலஸ்கோப் மூலம் முழு சந்திர கிரகணத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டது. கோவில்பட்டி காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி வளாகத்தில் தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் இதற்கான ஏற்பாடு செயப்பட்டு இருந்தது..

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் செல்வ கணேஷ் தலைமை தாங்கினார், தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன், எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சசிகலா அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியை கமலா ராணி கலந்து கொண்டு சந்திர கிரகணம் பற்றி விளக்கி பேசினார். சந்திர கிரகணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்த மாணவிகளுக்கு வானவியல் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது
இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள்,முழு நிலவு மெல்ல மறைந்து காப்பர் செந்நிறமாக மாறிய வானவியல் அதிசயத்தை டெலஸ்கோப் மூலம் மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்
தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் கருத்தாளர் முருகப்பெருமான், ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன், முன்னாள் வேளாண் ஆசிரியர் சுரேஷ்குமார்,நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் பிரபு, ஆசிரியர்கள் குரு பிரசாத், புளோரி தீபா,மகேஸ்வரிஉள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளிகூட கண்காணிப்பாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.







