சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்த அமைச்சர் துரைமுருகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவரை டாக்டர் பரிசோதனை செய்ததில் அமைச்சர் துரைமுருகனுக்கு தோள் பட்டை எலும்பில் லேசான சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து லேசான காயம் காரணமாக துரைமுருகனுக்கு கையில் கட்டு போடப்பட்டுள்ளது. மேலும் மூன்று நாட்கள் தொடர் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்றுநடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, கலைஞரின் கனவு இல்லம், தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 493 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் […]
சென்னை- திருநெல்வேலி வந்தே பாரத் ரெயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம்: மத்திய மந்திரியிடம் துரை
மதிமுக முதன்மைச் செயலாளர் வைகோ எம். பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இன்று (18.08.2025), ஒன்றிய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை அவரது அலுவலகத்தில் சந்தித்து, சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20665/20666) ரெயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் வழங்க வேண்டி கோரிக்கைக் கடிதம் வழங்கினேன். கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் வழங்க […]
கோவில்பட்டி பிச்சையா ஜிம்மில் தூத்துக்குடி மாவட்ட பளு தூக்கும் சங்கபொதுக்குழு கூட்டம் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட பளு தூக்கும் சங்க தலைவர் . சொர்ணமுத்து தலைமை தாங்கினார் செயலாளர் சுடலைமுத்து முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- *மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டி செப்டம்பர் மாத இறுதியில் கோவில்பட்டியில் நடத்தலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது *தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக கோவில்பட்டியில் பளு தூக்கும் வீரர்களுக்கான விளையாட்டு விடுதி அமைக்க வேண்டும் *சர்வதேச பழுதுக்கும் […]
நாடு முழுவதும் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருநாய்களை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு விசாரணை மேற்கொண்டது. 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் நடைபெற்ற விசாரணையில் தலைநகர் டெல்லியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட […]
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 21). இவர் தும்பைபட்டி ராகவி (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராகவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் வாகன விபத்தில் இறந்த நிலையில், கணவரை இழந்த ராகவியை சதீஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டு திருச்சியில் வசித்து வந்தார். ஆனால் சதிஷுக்கு ராகவியை விட வயது குறைவு என்பதால் இவர்களின் திருமணத்திற்கு ராகவியின் பெற்றோர், உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து வீட்டில் […]
கோவில்பட்டி அருணாச்சலம் பேட்டைத் தெரு அறிவுத்திருக்கோவில் சார்பாக கோவில்பட்டி மனவளக்கலை மன்றத்தில் வேதாத்திரி மகரிஷி 115 ஆவது ஜெயந்தி விழாவினை சிறப்பாகக் கொண்டாடினர். விழாவில் பேராசிரியர் எம்.விஜி தலைமை ஏற்று சிறப்புரை வழங்கினார்.பேராசிரியர் சரமாரிராஜ் முன்னிலை வகித்து மகரிஷியின் திட்ட முறைகளை விளக்கினார். பேராசிரியர் கோமதி மற்றும் மன்ற அன்பர்களான நாகஜோதி, மகேஸ்வரி, மகரிஷி ஜெயந்தி விழாவினை பற்றி விளக்கி பேசினர். முன்னாள் ஆசிரியர் சுரேஷ்குமார், கலந்து கொண்டு வாழ்வியல் விழுமியங்கள் பற்றியும், பேராசிரியர் சங்கரநாராயண மூர்த்தி […]
கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மரிய செல்வி தலைமை தாங்கினார். மேலாண்மைக்குழுத் தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பட்டதாரி தமிழ் ஆசிரியர் முனியபாரதி வரவேற்புரை ஆற்றினார். முதுகலை கணித ஆசிரியர் மணிமேகலை தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றி கூறினார். கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற துணைத் தலைவர் திருமலை முத்துசாமி சிறப்புரை ஆற்றினார். மேலும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். உதவித்தலைமை ஆசிரியர் […]
கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. அதிகாலையில் அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மகளிர் 108, 1008 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி தொடங்கிவைத்தார். தொடர்ந்து உலகம் சமாதானம் வேண்டியும், மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், வைரஸ் தொற்றுநோய் நோய் நீங்கி, அனைத்து மக்களும் நலமுடன் வாழவும் அன்னையிடம் வேண்டி மாபெரும் 1008 கஞ்சிக்கலயம், 26 அக்கினிசட்டி, […]
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ஆதிசக்தி பவுண்டேஷன் சார்பாக சௌபாக்கியா மஹாலில் பள்ளி மாணவர்களுக்கான இளைஞர்கள் பாராளுமன்றம் 2025 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 15 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய தலைமைத்துவ பண்புகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கம் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். ஆதிசக்தி பவுண்டேஷன் நிறுவனர் சௌமியா தினேஷ், ரோட்டரி மாவட்டத் துணை ஆளுநர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தனர். ரோட்டரி செயலாளர் பழனிகுமார் வரவேற்று பேசினார். சிறப்பு […]







