கோவில்பட்டியில் மாவட்ட பளுதூக்கும் சங்க கூட்டம்
கோவில்பட்டி பிச்சையா ஜிம்மில் தூத்துக்குடி மாவட்ட பளு தூக்கும் சங்கபொதுக்குழு கூட்டம் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட பளு தூக்கும் சங்க தலைவர் . சொர்ணமுத்து தலைமை தாங்கினார் செயலாளர் சுடலைமுத்து முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

*மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டி செப்டம்பர் மாத இறுதியில் கோவில்பட்டியில் நடத்தலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
*தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக கோவில்பட்டியில் பளு தூக்கும் வீரர்களுக்கான விளையாட்டு விடுதி அமைக்க வேண்டும்

*சர்வதேச பழுதுக்கும் வீரர்கள் அதிகம் உள்ள கோவில்பட்டியில் முறையாக பயிற்சி பெறுவதற்கு பயிற்சியாளர் உடன் கூடிய மல்டி ஜிம் உள் விளையாட்டரங்கம் அமைக்க வேண்டும்
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பற்றன.
கூட்டத்திற்கு காந்திஜி ஜிம், அம்மா ஜிம், பாவாணர் ஜிம், தூத்துக்குடி வாஞ்சிநாதன் ஜிம், கோல்டன் ஜிம், KTS ஜிம் ராஜா, பிட்னஸ் ஜிம் , A1ஜிம், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் .கமல்ரமேஷ் நன்றி கூறினார்







