இளையரசனேந்தல் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி
கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மரிய செல்வி தலைமை தாங்கினார்.

மேலாண்மைக்குழுத் தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பட்டதாரி தமிழ் ஆசிரியர் முனியபாரதி வரவேற்புரை ஆற்றினார்.

முதுகலை கணித ஆசிரியர் மணிமேகலை தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றி கூறினார். கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற துணைத் தலைவர் திருமலை முத்துசாமி சிறப்புரை ஆற்றினார். மேலும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். உதவித்தலைமை ஆசிரியர் முருக சரஸ்வதி நன்றியுரை ஆற்றினார்.







