கோவில்பட்டி அருகே உள்ள ஈராச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் மாரீஸ்வரி என்பவர் தனது தாத்தா சுப்பு, பாட்டி மாரியம்மாள் ஆகியோர் இறப்பினை பதிவு செய்து சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். இதற்கு சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ரூ.3500 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் மாரீஸ்வரி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாரை அலுவலகத்தில் […]
நானும் ஓய்வெடுக்கப் போவதில்லை, உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிப்பதில்லை; திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ”உடன்பிறப்பே வா” நிகழ்ச்சி மூலம் கழக நிர்வாகிகளை சந்தித்து நேரடியாய் பேசிட ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் ஆகிறது. ஆனாலும் எனக்கு சலிப்பே ஏற்படுவதில்லை. கழக உடன்பிறப்போடு உரையாடும் போது தான் நான் உற்சாகம் அடைகிறேன். கட்சி சார்ந்து மட்டுமின்றி உடன்பிறப்புகளின் தொழில், குடும்பம் பற்றியெல்லாம் பேசித் தெரிந்து கொள்கிறேன். அரசுப் பணிகள் […]
கோவில்பட்டி ரோட்டரி கிளப் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.. மாவட்ட துணை ஆளுநர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார் . செயலாளர் பழனிகுமார் வரவேற்றார். விருதுநகர் மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் நிர்மலா ரங்கசாமி ‘மனிதனும் தெய்வமாகலாம்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.. மாவட்ட புரவலர் விநாயகர் ஜி ரமேஷ்,மாவட்ட துணை ஆளுநர் முத்து செல்வம், ரோட்டரி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் பொருளாளர் நாராயணசாமி நன்றி தெரிவித்தார்.
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு(ஜி.வி.என்) கல்லூரியில் 12.8.2025 இன்று கல்லூரி நிறுவனர் தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாணாவர்களுக்கு பச்சைக்குதிரை, பல்லாங்குழி, மேக்ஸ் ரிலே ரேஸ், வள்ளிக் கும்மி, போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. 10 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் வேதியியல் துறைத்தலைவரும் இணைப் பேராசிரியருமான முனைவர் பா.உமாதேவி வரவேற்புரையாற்றினார். கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் தலைமையுரையாற்றினார். முதல்வர் மூ.சுப்புலெட்சுமி மற்றும் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் .பா.மகேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினர் […]
மாணவர் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆனதால், தூத்துக்குடி மாவட்டத்தில் 8 பள்ளிகள் உட்பட தமிழகத்தில் 207 அரசுப் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன. தமிழகத்தில், 31,332 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 18 லட்சத்து 46,550 மாணவ – மாணவியர் படிக்கின்றனர். இதில், பல பள்ளிகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளனர். ஒரு மாணவர் படிக்கும் பள்ளிகள் கூட உண்டு. அதுபோன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கும் […]
சென்னை மயிலாப்பூரில் அண்மையில் நடந்த கம்பன் விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து கம்ப ராமாயணத்தை மேற்கொள்காட்டி பேசினார். அப்போது கடவுள் ராமர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்றும், புத்தி சுவாதீனம் இல்லாதவர் குற்றம் செய்தால் தண்டனை குற்றமாகாது என்பது இந்திய தண்டனை சட்டம் என அவர் பேசிய கருத்து இந்து மத வழிபாட்டாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ராமர் குறித்த வைரமுத்துவின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், கம்பன் விழாவில் ராமரை […]
கோவில்பட்டி கல்லூரியில் தேசிய நூலகர் தின விழா; வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்திட மாணவர்கள்
நாடு முழுவதும் ஆகஸ்ட்-12ம் தேதி இந்திய நூலக தந்தை என போற்றப்படும் எஸ்.ஆர்.அரங்கநாதனின் பிறந்தநாள் தேசிய நூலகர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நூலகத்துறை சார்பில் தேசிய நூலகர் தின விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்திய நூலகதந்தை எஸ்.ஆர் அரங்கநாதனின் திருவுருவத்தை ரங்கோலி கோலமாக வரைந்து அகல் விளக்கேற்றி மாணவர்கள் மரியாதை செய்தனர். பின்னர் எஸ்.ஆர்.அரங்கநாதனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி […]
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-‘ என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். நம்மோட அரசியல் பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களத் தாண்டி வர்றோம்… இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட, அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளால கடந்து வந்துகிட்டே இருக்கோம்… வர்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாம முழு வீச்சுல தயாராகிட்டு வர்றோம்… இந்தச் சூழல்ல நம்மோட இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட் 21 (21/08/2025) […]
தனியாக வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருள்களை நேரடியாக அளிக்கும் திட்டம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் சிறப்புக் கவனம் தேவைப்படும் 20,42,657 முதியவர்கள், 1,27,797 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 21,70,454 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளன. அதன்படி சென்னை தண்டையார்பேட்டை கோபால் நகரில், மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டுக்கு நேரில் சென்று, ரேஷன் பொருள்களை வழங்கி […]
யானைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், அவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி உலக யானைகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி உலக யானைகள் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி ரோட்டரி கிளப் மற்றும் விருதுநகர் ரோட்டரி கிளப் கிங்டம் இணைந்து லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் கோவை சதாசிவம் தலைமையில் ‘ஆதியில் யானைகள் இருந்தன’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கோவில்பட்டி […]







