கோவில்பட்டி கல்லூரியில் தேசிய நூலகர் தின விழா; வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்திட மாணவர்கள் உறுதியேற்பு


நாடு முழுவதும் ஆகஸ்ட்-12ம் தேதி இந்திய நூலக தந்தை என போற்றப்படும் எஸ்.ஆர்.அரங்கநாதனின் பிறந்தநாள் தேசிய நூலகர் தினமாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நூலகத்துறை சார்பில் தேசிய நூலகர் தின விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
இந்திய நூலகதந்தை எஸ்.ஆர் அரங்கநாதனின் திருவுருவத்தை ரங்கோலி கோலமாக வரைந்து அகல் விளக்கேற்றி மாணவர்கள் மரியாதை செய்தனர்.

பின்னர் எஸ்.ஆர்.அரங்கநாதனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து கல்லூரி பாடப் புத்தகத்தோடு பொதுநூலக புத்தகத்தையும் வாசித்து பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்திட விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,நூலக வளர்ச்சிக்கு உதவி செய்திடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
.இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் செல்வராஜ் தலைமை தாங்கினார், கோவில்பட்டி வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன், நூலகர் செண்பகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

.கல்லூரி செயலாளர் கண்ணன் கலந்து கொண்டு தேசிய நூலகர் தின கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
கல்லூரி பேராசிரியர்கள் விஜய கோபாலன், செல்வலட்சுமி, கற்குவேல், ஆனந்த குமர், சிவா. ரமேஷ், சரவணகுமாரி, செல்வம் உள்பட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடக்கத்தில் மாணவி லாவண்யா அனைவரையும் வரவேற்றார். முடிவில் மாணவி காயத்ரி நன்றி கூறினார்.







