கோவில்பட்டி ஜி.வி.என்.கல்லூரியில் நிறுவனர் தினவிழா

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு(ஜி.வி.என்) கல்லூரியில் 12.8.2025 இன்று கல்லூரி நிறுவனர் தினவிழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் மாணாவர்களுக்கு பச்சைக்குதிரை, பல்லாங்குழி, மேக்ஸ் ரிலே ரேஸ், வள்ளிக் கும்மி, போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. 10 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் வேதியியல் துறைத்தலைவரும் இணைப் பேராசிரியருமான முனைவர் பா.உமாதேவி வரவேற்புரையாற்றினார். கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் தலைமையுரையாற்றினார். முதல்வர் மூ.சுப்புலெட்சுமி மற்றும் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் .பா.மகேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினர்

.
கணிதவியல் துறை உதவிப்பேராசிரியர் க.கிருஷ்ணவேணி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கல்லாரிச் செயலர் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசை வழங்கினார். கல்லூரியின் முன்னாள் மாணவரும் தீப்பெட்டி ஆலை அதிபருமான கருப்பசாமி சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்று அதிக புள்ளிகளைப் பெற்ற வேல்ஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கு சீல்டு வழங்கப்பட்டது. கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த தேர்வுநிலை உதவியாளர் ஜெயந்திக்கு சிறப்பு செய்யப்பட்டது.
இறுதியில் மின்னனுவியல் துறைத்தலைவர் ச.சங்கர்கணேஷ் நன்றி கூறினார், இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை வேதியியல் துறைத்தலைவரும் இணைப்பேராசிரியருமான பா.உமாதேவி, பேராசிரியர்களும், அலுவலர்களும் செய்திருந்தனர்.







