உலக யானைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம்
யானைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், அவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி உலக யானைகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி உலக யானைகள் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி ரோட்டரி கிளப் மற்றும் விருதுநகர் ரோட்டரி கிளப் கிங்டம் இணைந்து லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் கோவை சதாசிவம் தலைமையில் ‘ஆதியில் யானைகள் இருந்தன’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு கோவில்பட்டி ரோட்டரி கிளப் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.. செயலாளர் பழனி குமார் அனைவரையும் வரவேற்றார்.

பாலிடெக்னிக் சேர்மன் ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட பொருளாளர் விநாயகர் ஜி ரமேஷ் கலந்து கொண்டார். சிவகாசி டவுன் துணை ஆளுநர் செந்தில்குமார், துணை ஆளுநர் பரமேஸ்வரன்,முன்னாள் துணை ஆளுநர்கள் முத்து செல்வம்,. சீனிவாசன், துணை ஆளுநர் ஜாகிர் உசேன், ரோட்டரி கிளப் விருதுநகர் கிங்டம் தலைவர் ஜெய்லானி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் கோவில்பட்டி ரோட்டரி உறுப்பினர்கள் . கண்ணன். கிருஷ்ணசாமி,. பூல் பாண்டி ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரோட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர் எஸ் தங்கராஜ் நன்றி கூறினார்,







