தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் ஆகியவற்றை உணவு பரிமாறவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தாமல், மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருட்களை மட்டும் உணவு விநியோகிக்கவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தும் மிகச்சிறந்த பெரிய வகை உணவகங்களுக்கு, அதாவது வருடாந்திர விற்றுக் கொள்முதல் ரூ.12 லட்சத்திற்கும் மேற்பட்ட உணவு வணிகர்களுக்கு, தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் […]
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது செய்து, காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கடந்த 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 முடிவுகள் […]
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி நிறுவனர், கே.ராமசாமி பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, பிரீடம் அறக்கட்டளையுடன் இணைந்து வரா அறக்கட்டளையின் நிதியுதவியுடன், இலவச நவீன செயற்கைக் கால் மற்றும் கை அளவீடு செய்யும் முகாம் செப்டம்பர் 14 காலை 9 மணிமுதல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. சிறந்த மருத்துவர்களின் குழுவால் அளவீடு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு செயற்கைக் கால், செயற்கைக் கை, மூன்று சக்கர மிதிவண்டி, வாக்கர் உள்ளிட்ட உதவிப்பொருட்கள் நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் வழங்கப்படும். […]
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா இன்று காலை 14-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து கொடிப்பட்டம் வெள்ளிப்பல்லக்கில் வைக்கப்பட்டு 9 சந்தி வழியாக கொண்டுவரப்பட்டது. பஞ்சவாத்தியங்கள் முழங்க, வேத பாராயணங்கள் பாட, வாண வேடிக்கையுடன் 5.17 மணிக்கு கோயில் பிரகாரத்தில் உள்ள செப்புக் கொடிமரத்தில் […]
நாடு முழுவதும் திறந்தவெளியில் மலம் கழித்தலை ஒழிக்கவும்,திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்திடவும் 2014ம் ஆண்டு பாரதப் பிரதமரால் தூய்மை இந்தியா திட்டம் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு மரக்கன்றுகளை நட்டினர். இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரெயில் நிலைய மேலாளர் சங்கர் ராஜா தலைமை தாங்கினார். எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி செயலாளர் கண்ணன்,ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சங்கர பாண்டியன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். […]
தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.இதனை மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரிக்கப்படும் என நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்தது. இதனிடையே இந்த கைது சம்பவத்தின்போது, சட்டக்கல்லூரி மாணவர் காணாமல் போய்விட்டார் என வழக்கறிஞர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு மாற்று இடம் ஒதுக்கக் கோரி தலைமை நீதிபதி அமர்விலும் முறையீடு செய்யப்பட்டது.இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தலைமை […]
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கூலி’. நாகார்ஜுனா, சத்யராஜ், அமீர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதேநேரம், நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார். ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியானது. இந்த 50 ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடிப்பில் இதுவரை […]
துப்புரவு பணியாளர்கள் நள்ளிரவில் கைது: தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சி-விஜய் கண்டனம்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாக கைது செய்த பாசிச திமுக அரசுக்கு கண்டனம் குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும் போது மனசாட்சியுள்ள […]
அரசின் திட்டங்கள் மக்களுக்கு தடங்கல் இல்லாமல் சேர நடவடிக்கை; கோவில்பட்டி புதிய கோட்டாட்சியர்
கோவில்பட்டி கோட்டாட்சியராக இருந்த மகாலட்சுமி பணி மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய கோட்டாட்சியராக ஹிமான்சு மங்கல் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் தவாப்மாதப்பூரைச் சேர்ந்த இவர் மும்பை ஐ.ஐ.டி.யில் பி.டெக்., படித்துள்ளார். பின்னர் இவர் 3 ஆண்டுகள் தனியார்வங்கியில் பணியாற்றியுள்ளார். 2023 ஆம் ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு மாநிலகேடரி ல் நியமிக்கப்பட்டார். விருதுநகர் மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராக பணியாற்றி தற்போது கோவில்பட்டி […]
கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவ லகத்தில் தூத்துக்குடி உயர் திறன் மையத்தில் 10 நாட்கள் பயிற்சி முகாமில் பங்கேற்ற 7 பெண்களுக்கு பயிற்சி நிறைவு பெற்றது. முதற்கட்டமாக மருத்துவர் சீதாலட்சுமி முதலுதவி குறித்தான விழிப்புணர்வை வழங்கி அவர்களுக்கு உடல் திறன் சான்றிதழை வழங்கினார். தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து அலுவலர் கிரிஜா, மோட்டார் வாகன ஆய்வாளர் மாசிலாமணி, பிலிக்ஸ் ஆகியோர் பயிற்சி முடித்த நபர்களுக்கு நடத்துனர் சான்றிதழை வழங்கினர். இந்நிகழ்வில் ஆசிரியர் […]







