கோவில்பட்டி ரெயில்நிலைய தூய்மை பணியில் கல்லூரி மாணவர்கள்

நாடு முழுவதும் திறந்தவெளியில் மலம் கழித்தலை ஒழிக்கவும்,திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்திடவும் 2014ம் ஆண்டு பாரதப் பிரதமரால் தூய்மை இந்தியா திட்டம் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு மரக்கன்றுகளை நட்டினர்.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரெயில் நிலைய மேலாளர் சங்கர் ராஜா தலைமை தாங்கினார். எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி செயலாளர் கண்ணன்,ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சங்கர பாண்டியன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெயில் நிலைய சுகாதார ஆய்வாளர் குருநாத் அனைவரையும் வரவேற்றார்.
எஸ்.எஸ்.டி எம் கல்லூரி மாணவர்கள் ரெயில் நிலைய வளாகத்தை தூய்மைப்படுத்தி மரக்கன்றுகளை நட்டினர். சென்னை வாழ் நாடார்கள் சங்க தலைவர் தங்கமுத்து நாடார், கல்லூரி பொருளாளர் கண்ணன்,உறுப்பினர் அருண்,சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்து முருகன்,இந்தியா பசுமை இயக்க தலைவர் குமார்,கல்லூரி பேராசிரியர்கள் விஜயகோபாலன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.கல்லூரி பேராசிரியர் கற்குவேல் நன்றி கூறினார்.








