இலவச செயற்கை கால், கை அளவீடு முகாம்; கோவில்பட்டி நேஷனல் கல்லூரியில் நடக்கிறது
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி நிறுவனர், கே.ராமசாமி பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, பிரீடம் அறக்கட்டளையுடன் இணைந்து வரா அறக்கட்டளையின் நிதியுதவியுடன், இலவச நவீன செயற்கைக் கால் மற்றும் கை அளவீடு செய்யும் முகாம் செப்டம்பர் 14 காலை 9 மணிமுதல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

சிறந்த மருத்துவர்களின் குழுவால் அளவீடு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு செயற்கைக் கால், செயற்கைக் கை, மூன்று சக்கர மிதிவண்டி, வாக்கர் உள்ளிட்ட உதவிப்பொருட்கள் நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் வழங்கப்படும்.
இம்முகாமில், உதவி தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு, இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் செயற்கைக் கால், கை அளவீடு செய்து பயன் பெறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்..

பங்கேற்க விரும்பும் நபர்கள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், ஆதார் அட்டை, யுடிஐடி (இருப்பின்) அட்டை மற்றும் மாற்றுத் திறனாளி அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களை (ஜெராக்ஸ்) கொண்டு செல்ல வேண்டும்..
மேலும் விவரங்களுக்கு 93448 03795, 95433 43502, 94448 85083 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.







