கோவில்பட்டியில் அ.தி.மு.க- பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதாவது:-1998-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க இருந்தது. நாங்கள் தவறு செய்துவிட்டோம். கூட்டணி ஆட்சியில் இருந்துவிட்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல இடையில் வந்த சுப்பிரமணியசுவாமி பேச்சை கேட்டு ஒரு ஓட்டில் பா.ஜ.க. வை வீழ்த்தி வரலாற்று பிழை செய்துவிட்டோம். இனி ஒருநாளும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார் […]
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டமாக அவர் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார், அந்த வகையில் இன்று சிவகங்கை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து ராமநாதபுரம் பயணத்தை முடித்துக்கொண்டு முதுகுளத்தூரில் இருந்து நாளை வியாழக்கிழமை புறப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளம் வருகிறார். அங்கு வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது,. […]
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதனை சந்திக்க த.வெ.க. தீவிரமாக இறங்கி உள்ளது. த.வெ.க. சார்பாக ‘மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர்’ என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டமைப்பு பணிகளை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த மை டிவிகே (MY TVK) என பெயரிடப்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் தவெக […]
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின்குமார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பனியாற்றி வந்தார். இவரை சுர்ஜித் என்பவர் நெல்லையில் வைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றார். தனது அக்காவிடம் தொடர்ந்து பேசி வந்ததால், ஆத்திரமடைந்த சுர்ஜித், கவின்குமாரை வெட்டிக்கொலை செய்துள்ளார். காதல் விவகாரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தில் இளம்பெண்ணின் பெற்றோரான சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி […]
கோவில்பட்டி அருகே உள்ள சித்திரம்பட்டி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து. இவரது மனைவி மாரியம்மாள்.. இருவரும் கூலி தொழிலாளர்கள். மாரியம்மாளுக்கு கண் பிரச்சினை காரணமாக கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள கண் மருத்துவ பிரிவில் பரிசோதனை செய்துள்ளார். கண்ணில் புரை இருப்பதாகவும், ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறி இருக்கிறார். இதையடுத்து கடந்த 22ந்தேதி ஒரு கண்ணிலும் , 24 ந்தேதி மறு கண்ணிலும் ஆபரேஷன் செய்துள்ளனர். மறுநாள் மாரியம்மாளை வீட்டிற்கு போக சொல்லியுள்ளனர். […]
ஆக்கி இந்தியாவின் 15 வது சப் ஜூனியர் தேசிய ஆக்கி போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது இப்போட்டியில் தமிழக அணி கலந்து கொண்டு விளையாட உள்ளது தமிழக சப் ஜூனியர் அணியின் பயிற்சி முகாம் கடந்த ஒரு மாதமாக ராமநாதபுரத்தில் நடைபெற்று வந்தது 18 வீரர்கள் கொண்ட தமிழக அணியை ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜே மனோகரன் செயலாளர் செந்தில் ராஜ்குமார் அறிவித்தனர் இதில் கோவில்பட்டியைச் சேர்ந்த 5 வீரர்கள் தமிழக அணியில் […]
சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வலியுறுத்தி கோவில்பட்டி சாலைப்பணியாளர் சங்கத்தினர் கைகளில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சாலைப்பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் பரணிதரன் தலைமை தாங்கினார்… அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் உமாதேவி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சாலைப்பணியாளர் சங்க […]
தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் மாவட்ட மாநாடு சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் வீ.தளவாய்ராஜ் தலைமை தாங்கினார். கோவில்பட்டி ஆட்டோ ஓட்டுனர் பால்வண்ணநாதன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ரசல், மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார். நடைபெற்ற வேலைகள் குறித்த விபரங்களை சிஐடியு மாவட்ட உதவித் தலைவர் கே.சங்கரன் முன்வைத்தார். ஆட்டோ ஓட்டுனர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து தொழிலாளர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். மாநாட்டு தீர்மானங்களை தா.முனீஸ்வரன் முன்மொழிந்தார். புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு […]
கோவில்பட்டி ஊரணித்தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் தனது மனைவி காளிஸ்வரி பெயருக்கு வீட்டு தீர்வை பெயர் மாற்றம் செய்வதற்கு கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் உள்ள வருவாய் பிரிவில் விண்ணப்பம் செய்தார். பெயர் மாற்றம் செய்வதற்கு நகராட்சி வருவாய் உதவியாளர் நவீனா ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார், தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார், இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி செல்வக்குமார் , வருவாய் உதவியாளர் […]
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வணிக வளாகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரியைவிட குறைந்த அளவிலான வரி விதிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், ரூ.150 கோடி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அப்போதைய மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றிய தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, வரி விதிப்பு முறைகேட்டில் தொடர்புடைய ஓய்வுபெற்ற உதவி ஆணையர், உதவி வருவாய் அலுவலர் உள்ளிட்ட 8 பேரை […]







