10 ஆயிரம் லஞ்சம்: கோவில்பட்டி நகராட்சி பெண் அலுவலர் கைது
கோவில்பட்டி ஊரணித்தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் தனது மனைவி காளிஸ்வரி பெயருக்கு வீட்டு தீர்வை பெயர் மாற்றம் செய்வதற்கு கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் உள்ள வருவாய் பிரிவில் விண்ணப்பம் செய்தார்.

பெயர் மாற்றம் செய்வதற்கு நகராட்சி வருவாய் உதவியாளர் நவீனா ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார், தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்,
இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி செல்வக்குமார் , வருவாய் உதவியாளர் நவீனாவிடம் குறிப்ப்பிட்ட நாளில் ரூ.10,000 ஐ நேரில் கொடுத்தார்.

அப்போது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு தடுப்பு காவல் துணை கண்காணிப்பாளர் பீட்டர் பால் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக நவீனாவை பிடித்து லஞ்ச பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்,. தொடர்ந்து நவீனாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்







