கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு கண்பார்வை பாதிப்பு என குற்றச்சாட்டு
கோவில்பட்டி அருகே உள்ள சித்திரம்பட்டி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து. இவரது மனைவி மாரியம்மாள்.. இருவரும் கூலி தொழிலாளர்கள். மாரியம்மாளுக்கு கண் பிரச்சினை காரணமாக கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள கண் மருத்துவ பிரிவில் பரிசோதனை செய்துள்ளார்.

கண்ணில் புரை இருப்பதாகவும், ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறி இருக்கிறார். இதையடுத்து கடந்த 22ந்தேதி ஒரு கண்ணிலும் , 24 ந்தேதி மறு கண்ணிலும் ஆபரேஷன் செய்துள்ளனர். மறுநாள் மாரியம்மாளை வீட்டிற்கு போக சொல்லியுள்ளனர்.
அறுவை சிகிச்சை செய்த பிறகு இரு கண்களும் முற்றிலுமாக தெரியவில்லை என்றதும் , 28ந்தேதி மீண்டும் மருத்துவமனைக்கு மாரியம்மாள் அழைத்து வரப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் 5 நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் என்று உள்நோயாளி பிரிவில் அனுமதித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று திடீரென நெல்லையில் ஒரு தனியார் மருத்துவமனை பெயரைச் சொல்லி அங்கு போய் சிகிச்சை பெறுங்கள், அதற்கான முழு செலவையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று அங்குள்ள மருத்துவர் தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது







