தமிழக சப் ஜூனியர் ஆக்கி அணியில் கோவில்பட்டி வீரர்கள் 5 பேர் இடம் பெற்றனர்
ஆக்கி இந்தியாவின் 15 வது சப் ஜூனியர் தேசிய ஆக்கி போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது இப்போட்டியில் தமிழக அணி கலந்து கொண்டு விளையாட உள்ளது தமிழக சப் ஜூனியர் அணியின் பயிற்சி முகாம் கடந்த ஒரு மாதமாக ராமநாதபுரத்தில் நடைபெற்று வந்தது

18 வீரர்கள் கொண்ட தமிழக அணியை ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜே மனோகரன் செயலாளர் செந்தில் ராஜ்குமார் அறிவித்தனர் இதில் கோவில்பட்டியைச் சேர்ந்த 5 வீரர்கள் தமிழக அணியில் இடம் பெற்றுள்ளனர் கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழக வீரர் ஜெகதீஸ்வரன் (கோல் கீப்பர்) அம்பேத்கர் ஆக்கி அணியின் வீரர்கள் கவி சக்தி போஸ், தருனேஷ், நித்திஷ், மற்றும் பாண்டவர்மங்கலம் ஆக்கி அணியின் வீரர் கௌதம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

தமிழக அணியில் தேர்வு பெற்றுள்ள வீரர்களை ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமைநாயகம் செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா துணைச் செயலாளர் மாரியப்பன் உடற் கல்வியாசிரியர்கள் சுரேஷ்குமார், சுரேந்திரன் , முருகன், கிருஷ்ணமூர்த்தி, சிவானந்த, வேல்முருகன் ஆல்ட்ரின் அதிசயராஜ், தங்கராஜ், முன்னாள் ராணுவ வீரர்கள் காளிதாஸ் சுரேஷ்குமார் தனசேகரன் ஆகியோர் பாராட்டினர்







