திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: கூட்ட நெரிசலில் 44 பவுன் தங்க நகைகள் திருட்டுப்போனதாக
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகள் என சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். குடமுழுக்கு சிறப்பு பணிக்காக கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு பகுதியைச் சேர்ந்த அறநிலையத்துறை செயல் அலுவலர் கவிதா, திருச்செந்தூர் கோயில் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவர் திங்கள்கிழமை அதிகாலை யாகசாலை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனது தெரிய வந்தது. […]







