லிங்கம்பட்டியில் சாலை, குடிநீர் வசதிகள் கோரி கிராம மக்கள் மனு
கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி கீழக்காலனி அண்ணா நகர் பகுதி மக்களுக்கு சாலை வசதி, தெரு விளக்கு, வாறுகால் வசதி, குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் சிங்கராஜ் தலைமையில் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் பாபு, மாவட்ட குழு உறுப்பினர்கள் சேதுராமலிங்கம், ராமகிருஷ்ணன், நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம், துணைச் செயலாளர்கள் அலாவுதின், விஜயலட்சுமி உள்பட அப்பகுதி பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஆர்ப்பாட்டக் குழுவினர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் முத்துக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.








