தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல புதிய பேராயர் திமோத்தி ரவீந்தர் பொறுப்பேற்பு
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில பேராயர், பிரதம பேராயரின் ஆணையாளராக கோவை திருமண்டலப் பேராயர் திமோத்தி ரவீந்தர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தென்னிந்திய திருச்சபையின் பொறுப்பு பிரதம பேராயர், உதவி பிரதம பேராயரின் ஆணைப்படி நியமிக்கப்பட்டுள்ள அவர், தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் உள்ள திருச்சபை அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.

அவருக்கு குருமார்கள், திருச்சபை மக்கள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவர், தென்னிந்திய திருச்சபை ஒப்புதலுடன், இந்த திருமண்டலத்துக்கு விரைவில் புதிய தேதியில் தேர்தல் நடத்தப்படும் என, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.







