“பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்” -ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
அகில இந்திய ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்கத்தின் கோவில்பட்டி கிளை கூட்டம் நடந்தது. கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் நடந்த கூட்டத்துக்கு சங்கத் தலைவர் அருமைராஜ் தலைமை தாங்கினார்.. மூத்த உறுப்பினர் ஹரிஹர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

சங்கச் செயலாளர் தங்கவேலு, கடந்த மாதம் சென்னையில் நடந்த கூட்டத்தின் முடிவுகள் குறித்து பேசினார். ஓய்வு பெற்ற ரெயில் நிலைய அதிகாரி உதயசங்கர் இன்று (9-ம் தேதி) நடைபெறும் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் குறித்து பேசினார்.
கூட்டத்தில் பாரத் பென்சனர்ஸ் சமாஜின் பொதுச்செயலாளர் மகேஸ்வரி மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் மாதம் வரை கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஒரு ஓய்வூதியர் 80 வயதை தொடங்கும் போதே கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







