தமிழகம் முழுவதும் ஆக்கி விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஆண்டுதோறும் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான ஆக்கி லீக் (TSHL) போட்டி மாவட்ட அளவில், மண்டல அளவில், மாநில அளவில் நடத்தப்பட்டு வருகிறது. .அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவிலான போட்டிகள் ஜூலை 19,20 , ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளது இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டியில் வைத்து […]
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அண்ணாமலைசாமி வரவேற்புரை வழங்கி, மாணவர்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காவல் ஆய்வாளர் பிரேமா கலந்து கொண்டு போதைப் பொருட்கள் உடல் சீர்கேட்டையும், சமூக வீழ்ச்சியையும் ஏற்படுத்தும்..மாணவர்கள் நல்ல பழக்கங்களை கடைப்பிடித்து உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்று உரையாற்றினார். கருத்தரங்கில் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்
2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 18 கிராம ஊராட்சிகளில் ஜுலை – 7ம் தேதி 11ம்தேதி வரை வட்டார வள பயிற்றுநர்கள் மற்றும் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கையினை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. கிராமசபை கூட்ட நடவடிக்கைகளை நிர்ணய் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் […]
கோவில்பட்டி அருகே உள்ள விஜயாபுரி அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திமுக மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ப்ரியா குருராஜ் கலந்து கொண்டு, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு கலைஞர் நினைவு கேடயம் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார். மேலும், பள்ளியில் மாணவ மாணவிகள் விளையாடுவதற்காக விளையாட்டு உபரணங்களை வழங்கினார். இப்பள்ளி […]
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி உள்கட்சி விவகாரம் குறித்து அதிகார […]
நடிகர் கிங்காங் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
நகைச்சுவை நடிகர் கிங்காங். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவர், நடிகர் ரஜினிகாந்தின் ‘அதிசயபிறவி’ படம் மூலம் அறிமுகமானார். நடிகர் கிங்காங் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்குத் திருமணமாகி கலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நடிகர் கிங்காங் மகள் திருமணம் நேற்றுக் காலை நடைபெற்றது. அசோக் பில்லர் பகுதியில் இருக்கும் மஹாலில் திருமணம் நடைபெற்றது.திருமணத்தில் கிங்காங்கின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய […]
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகனும், கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணிக்கும் இடையே கட்சி விவகாரம் தொடர்பாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே கும்பகோணத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், அன்புமணி பெயருக்கு பின்னால் எனது பெயரை பயன்படுத்தக்கூடாது. தேவையென்றால் இனிஷியலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். இந்த நிலையில் சென்னையில் இருந்து டாக்டர் அன்புமணி நேற்று இரவு 8.10 மணியளவில் திடீரென காரில் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் […]
இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டியில் நடைபெற்றது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கூட்டமைப்பு மூத்த நிர்வாகி நல்லய்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், INTUC ராஜசேகரன், காங்கிரஸ் கட்சி துரைராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார், […]
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள மீனவ கிராமங்களில் இருந்து ஏராளமான மீனவர்கள் கடலில் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாட்டுப்படகிற்கும் மீன்வளத்துறை அலுவலகத்தின் மூலம் பிரத்தியேகமான பதிவெண் வழங்கப்பட்டு இருக்கும். அந்த பதிவு எண்ணின் அடிப்படையில் கடல் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அவர்களுக்கு மானிய விலையில் மண்எண்ணெய் வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் கூடங்குளம் அருகே கூட்டப்புளி மீனவ கிராமத்தை சேர்ந்த 8-க்கும் மேற்பட்டோர் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழக கொடியின் […]
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது 38). இவர் ஏமன் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நர்ஸ் வேலையில் இருந்தார். இந்தநிலையில் கடந்த 2014-ம் ஆண்டு நிமிஷாவின் கணவர் மற்றும் குழந்தை இந்தியா திரும்பினர். அவர் நாடு திரும்பும் நேரத்தில் ஏமனில் உள்நாட்டு போர் ஏற்பட்டதால், நிமிஷாவால் நாடு திரும்ப முடியவில்லை. அவர் ஏமனில் தங்கி இருந்தபோது அந்த நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து மருத்துவமனை ஒன்று தொடங்க திட்டமிட்டதாகவும், […]







