கோவில்பட்டியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர் ஆக்கி போட்டி; பதிவு செய்ய வேண்டுகோள்
தமிழகம் முழுவதும் ஆக்கி விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஆண்டுதோறும் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான ஆக்கி லீக் (TSHL) போட்டி மாவட்ட அளவில், மண்டல அளவில், மாநில அளவில் நடத்தப்பட்டு வருகிறது.

.அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவிலான போட்டிகள் ஜூலை 19,20 , ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளது இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டியில் வைத்து 19 , 20 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன கலந்து கொள்ளும் அனைத்து அணிகளுக்கும் இலவசமாக சீருடை மற்றும் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு கோப்பை, தனி நபர் பரிசு என அனைத்தும் வழங்கப்பட உள்ளன.

எனவே போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளிகள் தங்களது அணிகளின் பெயரை 17/7/2025 மாலை 5 மணிக்குள் 82483 22084 , 94446 43868 ஆகிய அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும்
போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் திருச்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பாரதி ராஜன், முருகன் பிரகாஷ், சுரேஷ்குமார், ஆகியோர் செய்து வருகிறார்கள்.







