போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அண்ணாமலைசாமி வரவேற்புரை வழங்கி, மாணவர்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காவல் ஆய்வாளர் பிரேமா கலந்து கொண்டு போதைப் பொருட்கள் உடல் சீர்கேட்டையும், சமூக வீழ்ச்சியையும் ஏற்படுத்தும்..மாணவர்கள் நல்ல பழக்கங்களை கடைப்பிடித்து உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்று உரையாற்றினார். கருத்தரங்கில் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்







