18 கிராம ஊராட்சிகளில் சமூகதணிக்கை சிறப்பு கிராம சபைகூட்டம்
2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 18 கிராம ஊராட்சிகளில் ஜுலை – 7ம் தேதி 11ம்தேதி வரை வட்டார வள பயிற்றுநர்கள் மற்றும் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கையினை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. கிராமசபை கூட்ட நடவடிக்கைகளை நிர்ணய் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பரிவல்லி கோட்டை கிராம ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் வசந்தி தலைமை தாங்கினார், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சங்கர் முன்னிலை வகித்தார் ஊராட்சி செயலர் மனோகரன் அனைவரையும் வரவேற்றார்.
ஓட்டப்பிடாரம் சமூக தணிக்கை வட்டாரவள பயிற்றுநர் ரமேஷ் கலந்து கொண்டு சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக பொதுமக்களுடன் கலந்துரையாடல் செய்தார். சமூகத்தணிக்கை அறிக்கை மீது கிராம சபையில் விவாதிக்கபட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

கிராம வள பயிற்றுநர்கள் விரத லட்சுமி, சங்கீதா, கலாமுத்து செல்வி, மேனகா,பணித்தள பொறுப்பாளர் சுமதி, மகளிர் குழு பொருப்பாளர் கலா,உள்பட 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பணித்தள பொருப்பாளர் செபராணி நன்றி கூறினார்.
இதே போல் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் மலைப்பட்டி, ஓணமாக்குளம் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 18 கிராம ஊராட்சியில் சமூகதணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.







