அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

கோவில்பட்டி அருகே உள்ள விஜயாபுரி அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திமுக மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ப்ரியா குருராஜ் கலந்து கொண்டு, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு கலைஞர் நினைவு கேடயம் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார். மேலும், பள்ளியில் மாணவ மாணவிகள் விளையாடுவதற்காக விளையாட்டு உபரணங்களை வழங்கினார்.

இப்பள்ளி தொடர்ந்து 13 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியும், என்.எம்.எம்.எஸ், டிரஸ்ட், தேசிய திறனாய்வு தேர்வுகளிலும் பெற்று வந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பிரதிநிதி முருகன், கிளைச் செயலாளர் முத்துப்பாண்டி, மாணவ மாணவிகள். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்








