மாநில போட்டிக்கான தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் ஆக்கி அணி வீரர்கள் தேர்வு; கோவில்பட்டியில் 13-ந்தேதி நடக்கிறது
ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமைநாயகம் மற்றும் செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஆக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் ஜூனியர் ஆண்கள் மாநில ஆக்கி சாம்பியன் போட்டி ஜூலை 19 முதல் 23 வரை கோவில்பட்டியில் நடக்க உள்ளது
இப்போட்டியில் கலந்து கொள்ளும் தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் ஆக்கி அணி வீரர்களின் தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை 13/7/2005 மாலை 4.30 மணி அளவில் அளவில் கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் நடைபெறும்.

தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்கள் 1.1.2006 க்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும் மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவராகவோ அல்லது தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளியிலோ, கல்லூரிகளிலோ பயின்று வருபவராக இருக்க வேண்டும்
ஆதார் மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் கொண்டு வர வேண்டும் மேலும் விவரங்களுக்கு 9443190781 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,.







