வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா
இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டியில் நடைபெற்றது.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கூட்டமைப்பு மூத்த நிர்வாகி நல்லய்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், INTUC ராஜசேகரன், காங்கிரஸ் கட்சி துரைராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார், ஜெகநாதன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நலஇயக்கம் செல்லத்துரை என்ற செல்வம், மனித நேயம் மக்கள் கட்சி செண்பகராஜ், பகத்சிங் இரத்ததானக்கழகம் காளிதாஸ், லட்சுமணன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







