மதிமுக துணை செயலாளர் மல்லை சத்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-‘ம.தி.மு.க.வில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற உணர்வுடனே இதுநாள் வரை இருந்து வந்துள்ளேன். ஆனால் கட்சியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை. அதற்கு நிச்சயமாக நான் காரணம் இல்லை. கடந்த 9-7-2025 புதன்கிழமை அன்று என் அன்புத் தலைவர் வைகோ எம்.பி. ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தமிழிழத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு புலிப்படை வீரன் மாத்தையா துரோகம் செய்ததைப் போன்று எனக்கு (வைகோ) மல்லை சத்யா துரோகம் செய்து […]
பள்ளி வகுப்பறைகளில் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வந்த பெஞ்ச் வரிசை முறையை மாற்றி அமைக்கபடுகிறது,.’ பொதுவாக பள்ளி வகுப்பறை வடிவமைப்பானது ஆசிரியர்களுக்கு நேராக வரிசையாக பெஞ்ச்கள் போடப்பட்டு இருக்கும். அதில் மாணவர்கள் வரிசையாக அமர்ந்து பாடங்களை கவனிப்பார்கள். இதில், உயரமான மாணவர்கள் கடைசி பெஞ்சிலும், உயரம் குறைந்த மாணவர்கள் முதல் பெஞ்சிலும் அமர்வது பொதுவான ஒன்றாகும். இந்த நிலையில், பள்ளி வகுப்பறைகளில் பெஞ்ச் இருக்கும் அமைப்பை மாற்றி அமைக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார். இது […]
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மருதாநல்லூரை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 47) என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அவரை 2023-ம் ஆண்டு முதல் திருச்சி மத்திய சிறையில் அடைத்து இருந்தனர். வழக்கமாக ஆயுள் தண்டனை கைதிகளை சிறைச்சாலையில் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துவார்கள். அந்த வகையில் ராஜேந்திரன் உள்பட 5 […]
கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில் நுண்கலைகள் மற்றும் இசைக்கருவி வகுப்பு கட்டிடங்கள் திறப்பு
கோவில்பட்டி அரசு மகளிர் தகைசால் மேல்நிலைப் பள்ளியில் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுக்கான 10 லட்சம் மதிப்பீட்டில் இசைக்கருவிகள் வகுப்புக்கான புதிய கட்டிடமும்,பொன்னூஸ் நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் சார்பில் 26 லட்சம் மதிப்பீட்டிலான நுண் கலைகள் வகுப்புக்கான பொ சூசையம்மாள் நினைவு கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தலைமை தாங்கினார் முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி,பொன்னூஸ் நேச்சுரல்ஸ் நிறுவன உரிமையாளர் பொன்னுசாமி,லிபர்டி நிறுவனங்களின் உரிமையாளர் எஸ்.எஸ் டி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி உழவர் சந்தையில் நடந்தது. உழவர் சந்தைக்கு வருகை தந்த பொது மக்களுக்கு பிளாஸ்டிக் பொருளுக்கு பதிலாக மஞ்சப்பை பயன்படுத்திட வலியுறுத்தி மஞ்சப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்..உழவர் சந்தை நிர்வாக அலுவலர் முத்துக்குமார்,உதவி வேளாண்மை அலுவலர்கள் கண்ணன், மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன் கலந்துகொண்டு பொது மக்களுக்கு மஞ்சப்பை […]
பாட்டாளி மக்கள் கட்சி செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அப்படி ஒரு முயற்சி நடந்திருந்தால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். ராமதாஸ் அவர்கள் தமிழ்நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர். அவரது இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டிருந்தால், அது அங்கு கடுமையான பாதுகாப்பு குறைபாடு நிலவுவதைத் தான் […]
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வுகளுக்கான குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஏரல், எட்டயபுரம், கயத்தார், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், விளாத்திகுளம் ஆகிய வட்டங்களுக்குட்ப்பட்ட 101 இடங்களில் 127 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 37000 க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். குரூப் 4 தேர்வு மையங்களான எட்டயபுரம் மகாகவி பாரதியார் நினைவு […]
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த மாதம் 12 ஆம் தேதி கோர விபத்தில் சிக்கியது. இந்த விமான விபத்தில், விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில், விமானப் பணியாளர்கள் உள்பட 241 பேர் பலியாகினர். மேலும், விமானம் மோதிய மருத்துவக் கல்லூரிக் கட்டிடம் மற்றும் குடிருப்புப் பகுதிகளில் இருந்த 19 பேர் பலியாகினர். இதன்படி அந்த விபத்தில் 229 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் தரையில் […]
உலக காகித பை தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி புதுக்கிராமம் இல்லத்தார் நடுநிலைப்பள்ளியில்,பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் காகித பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு இல்லத்துப்பிள்ளைமார் சமூக சங்கத்தலைவர் .சோ.சங்கரன் தலைமை ஏற்று உரையாற்றினார்.மாணவ, மாணவியர் தம் கைவண்ணத்தால் அழகிய காகிதப்பைகள் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொறுப்பு தலைமை ஆசிரியை,மற்றும் அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.
மாநில போட்டிக்கான தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் ஆக்கி அணி வீரர்கள் தேர்வு; கோவில்பட்டியில்
ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமைநாயகம் மற்றும் செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஆக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் ஜூனியர் ஆண்கள் மாநில ஆக்கி சாம்பியன் போட்டி ஜூலை 19 முதல் 23 வரை கோவில்பட்டியில் நடக்க உள்ளது இப்போட்டியில் கலந்து கொள்ளும் தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் ஆக்கி அணி வீரர்களின் தேர்வு வருகிற […]







