கோவில்பட்டி உழவர் சந்தையில் மஞ்சப்பை விழிப்புணர்வு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி உழவர் சந்தையில் நடந்தது.
உழவர் சந்தைக்கு வருகை தந்த பொது மக்களுக்கு பிளாஸ்டிக் பொருளுக்கு பதிலாக மஞ்சப்பை பயன்படுத்திட வலியுறுத்தி மஞ்சப்பை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்..உழவர் சந்தை நிர்வாக அலுவலர் முத்துக்குமார்,உதவி வேளாண்மை அலுவலர்கள் கண்ணன், மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன் கலந்துகொண்டு பொது மக்களுக்கு மஞ்சப்பை வழங்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் மாரிச்சாமி, கண்ணன் ராஜேந்திரன், பூல்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடக்கத்தில் ரோட்டரி சங்க செயலாளர் பழனிக்குமார் அனைவரையும் வரவேற்றார். முடிவில் பொருளாளர் நாராயணசாமி நன்றி கூறினார்







