ஞாயிறு பிரதோஷம்…ராகுகால பிரதோஷ தரிசனம்! சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி கைலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி என்று சிவன் கோயிலுக்குச் சென்று நந்தியம் பெருமானையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுங்கள். இது, மிகுந்த பலன்களை வாரி வழங்கும். ஞாயிற்றுக்கிழமையில், ராகுகால வேளையில், பிரதோஷ நேரத்தில் தரிசனம் செய்யுங்கள். சகல தோஷங்களும் விலகும். வாழ்வில் சந்தோஷம் நிலைக்கும் என்பது உறுதி ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம். மறக்காமல் சிவ தரிசனம் செய்யுங்கள். […]
கோவில்பட்டியில் மாநில சீனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது. 33 மாவட்ட அணிகள் பங்கேற்ற இந்த போட்டி, 3 மைதானங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற நான்காவது நாள் போட்டியில் காலை 6.30 மணி அளவில் முதலாவது கால் இறுதி ஆட்டம் நடந்தது. சென்னை மாவட்ட அணி தூத்துக்குடி மாவட்ட அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது இரண்டாவது கால் இறுதி ஆட்டம் 8.30 மணி […]
கோவை மாவட்டம் புரவிபாளையத்தில் உள்ள ஒரு குவாரியில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுத்ததாக கூறி அந்த குவாரியை நடத்தி வந்த செந்தாமரை என்பவருக்கு 32 கோடியே 29 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை உதவி ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் உதவி ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ததுடன் அபராத தொகையை 32 கோடியிலிருந்து 2 கோடியே 48 லட்சம் ரூபாயாக […]
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருபுறங்களிலும், சாலையின் நடுப்பகுதியிலும் மரக்கன்றுகள், செடிகள் நட்டு பராமரிக்கவில்லை, இரவு நேரங்களில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் வண்ண விளக்குகள் வைக்கவில்லை என்பன உள்ளிட்ட காரணங்களால் மதுரை, தூத்துக்குடி இடையிலான 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் எனக்கூறி தூத்துக்குடியை சேர்ந்த பாண்டியன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சாலையை முறையாக பராமரிக்கவில்லை எனக்கூறி எலியார்பத்தி மற்றும் புதூர் பாண்டியாபுரம் சுங்கச் […]
கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு அருகே உள்ள அய்யனார்ஊத்து கிராமத்தில் துணை மின்நிலையம் உள்ளது. இங்கிருந்து தான் காற்றாலைகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த துணை மின்நிலையத்தில் உள்ளடிரான்ஸ்பார்மர் ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று அதிகம் வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அதோடு தீ அருகே இருந்த மின்மாற்றிகளுக்கும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கங்கைகொண்டான், பாளையங்கோட்டை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து சுமார் 7 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை […]
தமிழ்நாட்டில் தற்போது 463 என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்படுகின்றன. என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (மே) 7-ந்தேதி தொடங்கியது. விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். விண்ணப்பப்பதிவு செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று மாலைநேர தகவலின்படி, 2 லட்சத்து 98 ஆயிரத்து 425 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். இருப்பினும் விண்ணப்ப கட்டணங்களை செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்பவர்கள்தான் அடுத்தகட்டமாக கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். அந்தவகையில் 1 லட்சத்து 33 ஆயிரத்து […]
கோவில்பட்டியில் மாநில அளவிலான சீனியர் ஆண்கள் ஆக்கிபோட்டி நடைபெற்று வருகிறது. 3 மைதானங்களில் நடக்கும் இப்போட்டியில் 33 மாவட்ட அணிகள் பங்கேற்றன, இன்று வெள்ளிக்கிழமை மூன்றாம் நாள் முதல் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி 4-0 என்ற கோல் கணக்கில் திருவாரூர் மாவட்ட அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது இரண்டாவது போட்டியில் சேலம் மாவட்ட அணி 5-1 என்ற கோல் கணக்கில் திருப்பூர் மாவட்ட அணியை வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில் கிருஷ்ணகிரி மற்றும் விருதுநகர் அணிகள் தலா […]
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைத்துக் கொடுப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.90 கோடி ஊழல் நடைபெறுவதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஊழல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதற்கு காரணமானவர்கள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. குடிநீர் வாரியத்தில் மின்னியலாளர்கள் (எலக்ட்ரீஷியன்கள்), […]
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகிலுள்ள பணிக்கர்குளம் மேல தெருவைச் சேர்ந்தவர் கற்பக பாண்டியன். இவரது மனைவி சத்யா (வயது 23). இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு சத்தியா குழந்தையுடன், தம்பி குமாருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கயத்தார்- கோவில்பட்டி நெடுஞ்சாலையில் வந்தபோது எதிரே வந்த ஒரு டிப்பர் லாரி பைக் மீது மோதியதில் சத்யா குழந்தையுடன் கீழே விழுந்தார். இதில் லாரியின் பின்பக்க டயர் சத்யாவின் தலையில் ஏறி இறங்கியதில் […]
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியபட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்தவர் ஜான் ரிச்சர்டு. சவுதி அரேபியாவில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டார். இவருடைய மனைவி சகாய சில்ஜா (வயது 28). இந்த தம்பதியின் மகன் ஜோகன் ரிஷி (4). கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ந் தேதி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தான்.திடீரென காணாமல் போய் விட்டான். இது பற்றி அறிந்த சகாய சில்ஜா, மகனை அந்த பகுதி முழுவதும் தீவிரமாக தேடினார்.. ஆனால் சிறுவனை பற்றி […]







