விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியை அடுத்த வடகரையில் ராஜா சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் இன்று பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிப்பு பணி நடந்து கொண்டிருந்தபோது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஒரு அறை முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது.இந்த விபத்தில் அந்த அறையில் இருந்த அனைவரும் சிக்கிகொண்டனர்.மற்ற அறைகளில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். […]
கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி கிராமத்தில் சேதமடைந்த மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்தை இடித்து அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஏஐடியுசி கவுன்சில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஏஐடியுசி கவுன்சில் மாவட்ட செயலாளர் பாபு தலைமை தாங்கினார். தாலுகாக்குழு உறுப்பினர் ரெங்கநாதன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், நகர துணைச் செயலாளர்கள் அலாவுதீன், விஜயலட்சுமி, தாலுகா உதவிச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு […]
நாகூர் அருகே உத்தமசோழபுரத்தில் கட்டப்படும் கதவணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் இன்று நடைபெற்றது. ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னால் அமர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அமைப்பு செயலாளர் எஸ்.ஸ்ரீதர் நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் கமல்ராமன்,துணை செயலாளர் […]
மாநிலங்களவை தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கமல்ஹாசன் போட்டியின்றி தேர்வாகிறார்கள்
தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் ம.தி.மு.க.வின் வைகோ, தி.மு.க.வின் பி.வில்சன், சண்முகம், அப்துல்லா, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க.வின் சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. எனவே இந்த 6 பதவிகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 2- ந்தேதி தொடங்கியது. இந்த தேர்தலில், எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் தி.மு.க. சார்பில் 4 பேரும், அ.தி.மு.க சார்பில் 2 பேரும் வெற்றி பெறுவார்கள். […]
பா.ம.க. தலைமை நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கு கட்சியின் தலைமை முடிவு செய்திருக்கிறது. முதற்கட்டமாக 10 வருவாய் மாவட்டங்களில் கீழ்க்கண்ட அட்டவணைப்படி பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. 1. 15.06.2025 ஞாயிறு காலை 10 மணி – திருவள்ளூர் மாவட்டம் 2. 15.06.2025 ஞாயிறு மாலை […]
சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:- திமுக கூட்டணியில் இருக்கும் கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறேன். தற்போது நீடித்து வரும் ஒற்றுமையை, மேலும் கட்டிக் காப்பாற்றுவதன் அவசியம் உள்ளது. அதற்கேற்ப திமுகவின் அணுகுமுறை இருக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளை மதிப்பதில் திமுகவை இன்றைக்கும் எந்தக் குறையும் சொல்ல முடியாது. இதே நிலை தொடர வேண்டும். கடந்த 2021- தேர்தலில் திமுக ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். அது […]
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை ஐ.சி.சி. ‘ஹால் ஆப் பேம்‘ என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருகிறது. அதன்படி அந்த கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 7 வீரர்களை சேர்த்து ஐ.சி.சி நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் இடம்பெற்றுள்ளார். 3 ஐ.சி.சி. வெள்ளைப்பந்து உலகக்கோப்பைகளை (டி20, ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி) வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்தவர். அத்துடன் விராட் கோலி, ரோகித் சர்மா […]
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 1,299 காவல் உதவி ஆய்வாளர் (சப் இன்ஸ்பெக்டர்) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 4ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். காலிப் பணியிடங்களில் ஏற்கனவே பணியில் உள்ளோருக்கு 20%, பொதுத்தேர்வர்களுக்கு 80% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணியில் உள்ள காவலர்களுக்கு எழுத்துத்தேர்வு மட்டும் நடத்தப்படும் எனவும் உடல் தகுதி தேர்வு இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் வருபவர்களுக்கு எழுத்துக்தேர்வுடன் உடல் தகுதித்தேர்வும் நடத்தப்படும் என […]
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், கோவில்பட்டி வாசகர் வட்டம்,எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி, புனித ஓம் கல்வி நிறுவனங்கள், சார்பில் கோவில்பட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள காந்தி மண்டபத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்று வந்தது.. மே 21 அன்று தொடங்கிய புத்தக கண்காட்சி நேற்று ( ஜூன் 9ம் தேதி) நிறைவு பெற்றது. புத்தக கண்காட்சியில் மொத்தம் ரூ. 6 லட்சத்திற்க்கான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. நேற்று மாலை நடைபெற்ற நடந்த நிறைவு விழாவில் குலுக்கல் முறையில் தேர்வான […]
கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக வைகாசி விசாகத்தை முன்னிட்டு 46 வது மாதம் அன்னதானம். கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் பூவன நாத சுவாமி திருக்கோவிலுடன் இணைந்த சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு.. எம் கே எஸ் கேட்டரிங் தொழிலதிபர் கருப்பசாமி, மணிப்பிள்ளை குடும்பத்தினர் வரவேற்றனர். கோவில்பட்டி விஏஓ மந்திர சூடாமணி, லட்சுமி டெக்கரேஷன் அதிபரும், நகர் மன்ற உறுப்பினருமான சண்முகவேல், கழுகுமலை மகாலட்சுமி ஆட்டோ கன்சல்டிங் அதிபர் காளிராஜ்.. ஆகியோர் முன்னிலை […]







