கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் 46 வது மாத அன்னதானம்

கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக வைகாசி விசாகத்தை முன்னிட்டு 46 வது மாதம் அன்னதானம். கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் பூவன நாத சுவாமி திருக்கோவிலுடன் இணைந்த சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவிலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு.. எம் கே எஸ் கேட்டரிங் தொழிலதிபர் கருப்பசாமி, மணிப்பிள்ளை குடும்பத்தினர் வரவேற்றனர். கோவில்பட்டி விஏஓ மந்திர சூடாமணி, லட்சுமி டெக்கரேஷன் அதிபரும், நகர் மன்ற உறுப்பினருமான சண்முகவேல், கழுகுமலை மகாலட்சுமி ஆட்டோ கன்சல்டிங் அதிபர் காளிராஜ்.. ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

பராசக்தி மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கோவில்பட்டி நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் ராஜா என்ற விஜி, கழுகுமலை பத்திர எழுத்தர் பெரிய ராஜா, சிறப்பு ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அர்ஜுனன் பொங்கல் பிரசாதத்தை வழங்கினார். கோவில்பட்டி அரசு மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் அருள்ராஜ் அன்னதானத்தை தொடக்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில். அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினரும், நகர் மன்ற உறுப்பினருமான லவராஜா, செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், பாலமுருகன், சண்முகசுந்தரம், தங்கராஜ், எஸ் பி பாண்டியன், முத்து மாரியப்பன், மாரிமுத்து.. பில்டிங் காண்ட்ராக்டர் வன்னியன், ஜீவ அனுக்கிரக அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன், ஆசிரியர்கள் ஜீவானந்தம், கயத்தாறு கணேசன், ஆனந்த செல்வன், ராஜேந்திரன்,சுந்தர், பசுமை இயக்கம் செந்தில், பில்டிங் காண்ட்ராக்டர் அழகுமுத்து, கழுகுமலை கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.. முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.








