தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தூத்துக்குடி விக்டோரியா சி.பி.எஸ்.சி பள்ளி, எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி மற்றும் கிங் ஆப் கிங்ஸ் மெட்ரிக் பள்ளி ஆகிய மையங்களில் ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வுகளான குரூப் 1 மற்றும் 1 A தேர்வு இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் […]
கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து ஆத்திகுளம் காலனி தெருவை சேர்ந்தவர் கற்பகராஜ். இவருடைய மனைவி அனிஷா (26). இவர்களுக்கு அதுலியாஸ்ரீ என்ற 9 மாத பெண் குழந்தை உள்ளது. நேற்று காலையில் அனிஷா தனது தம்பி இளையராஜாவின் (25) மோட்டார் சைக்கிளில் குழந்தை அதுலியாஸ்ரீயுடன் சென்றார். ஆத்திகுளம்-மானங்காத்தான் சாலையில் சென்றபோது, அந்த வழியாக தனியார் கிரஷரில் இருந்து தார் கலவை ஏற்றி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் […]
கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. கோவில்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள்ண ஆனந்த், மணிமேகலா, விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் வழக்குகள் விசாரணை நடைபெற்றது. நிலுவையில் இருந்த மோட்டார் வாகன விபத்து வழக்கு, உரிமையியல் வழக்குகள், சிறு, குறு வழக்குகள், காசோலை மோசடி வழக்கு, வங்கி வராக்கடன் உள்ளிட்ட 1177 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 572 […]
கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா கேட்டு கோட்டாட்சியரிடம் மனு
கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் நிரந்தரமாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த பகுதியினர் இன்று கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் திரண்டு வந்தனர். கோட்டாட்சியர் மகாலட்சுமியை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் இசக்கிராஜா, தேவர் சமூக நலச்சங்க செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் வழங்கிய மனுவில் கூறி இருந்ததாவது :- கோவில்பட்டி கதிரேசன் கோயில் மலை அடிவாரத்தில் உள்ள வீரவாஞ்சி நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் […]
மதுரையில் இன்று விநாயகா மிஷன்ஸ் லா ஸ்கூல் மற்றும் மதுரை கிளை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் இணைந்து சட்டக் கல்வி மாநாடு நடைபெற்றது. சட்டக் கல்வியும், நடைமுறை வழக்கறிஞர் உலகமும் கைகோர்த்து புதிய வழிகளை உருவாக்கும் வரலாற்றுப் நிகழ்வாக இது அமைந்தது. இந்த நிகழ்வில் மதுரை கிளை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் தலைவர் ஐசக் மோகன்லால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். “சட்டக் கல்வியும், நடைமுறை அனுபவமும், ஒன்றிணைய வேண்டும்” என்பதைக் கவனத்தில் கொண்டு , […]
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ககன்யான் என்ற திட்டத்தை 2027-ம் ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி அவர்களை மீண்டும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதுதான் இதன் நோக்கம். அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து கடந்த 2022-ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்கலத்தை அனுப்பின. இது உலகின் முதல் தனியார் விண்கலம் ஆகும். அந்த வகையில் ஆக்சியம் 4 என்ற பெயரில் 4-வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது. இதன்படி, […]
சென்னையில் ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை தேசிய சப் ஜூனியர் ஆண்களுக்கான ஆக்கி போட்டி மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் தமிழக அணி கலந்து கொண்டு விளையாடுகிறது. தமிழக அணிக்கான தேர்வு கடந்த மாதம் வேலூரில் நடைபெற்ற மாநில சாம்பியன் போட்டியில் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கான பயிற்சி முகாம் 16-தேதி திங்கள் கிழமை முதல் திண்டுக்கல் ஜி .டி.என்.கல்லூரியில் நடைபெறஉள்ளது. 40 வீரர்கள் பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். […]
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான ‘நீட்-யூஜி 2025’ தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்தத் தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த 3ம் தேதி வெளியிட்டது. மாணவர்கள் இந்த விடைக்குறிப்பின் மீது தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் கடந்த 5ம் தேதியுடன் முடிவடைந்தது.மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகளைப் பரிசீலித்த பிறகு, இறுதி விடைக்குறிப்பு (பைனல் ஆன்ஷர் கீ) தயாரிக்கப்படும். அதன் […]
கர்நாடக மாநிலத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்கள் ‘பைக் டாக்சி’ சேவையை வழங்கி வருகின்றன. இந்த பைக் டாக்சி சேவைக்கு கர்நாடக அரசின் போக்குவரத்துத்துறை தடை விதித்தது. இதையடுத்து அந்த நிறுவனங்கள் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பைக் டாக்சிக்கு அரசு விதித்த தடை செல்லுபடியாகும் என்று உத்தரவிட்டது. வருகிற 15-ம் தேதிக்கு பிறகு பைக் டாக்சிகளுக்கு அனுமதி இல்லை என்று ஐகோர்ட்டு ஏற்கெனவே கூறிவிட்டது. இந்த நிலையில் இந்த […]
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட வே.சத்திரப்பட்டியில் சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் கண்மாய் கரையில் மர்மமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபாகரன் வீட்டுக்கு போலீசார் சோதனை செய்ய சென்றனர். அப்போது வீட்டில் அவர் இல்லாததால் அவரது தந்தையை போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனை அறிந்த பிரபாகரன் ஆத்திரம் அடைந்தார். தான் வீட்டில் இல்லாதபோது போலீசார் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து […]







