தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பதன தொழில்நுட்பத் துறை வாயிலாக இம்மாதம் (மார்ச்,2025) 26ஆம் தேதி புதன்கிழமை “மதிப்பூட்டிய மீன்பொருட்கள் தயாரிப்பு முறைகள்” எனும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் எளிதில் தயாரிக்கக்கூடிய மதிப்பூட்டிய மீன்பொருட்களான மீன் ஊறுகாய், மீன் தொக்கு, இறால் ஊறுகாய், மீன் கட்லெட், மீன் உருண்டை போன்ற மதிப்பூட்டிய மீன்பொருட்கள் தயாரிக்கும் தொழில்நுட்ப […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக இந்தி திணிப்பு,நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் கோவில்பட்டி கடலையூர் ரோடு லாயல் மில் காலனிபகுதியில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் பாரதி,ராதாகிருஷ்ணன்,ஜோசப்அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார். மாநில மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, இளம் பேச்சாளர் உமாராணி, கோவில்பட்டி சட்டமன்றத் […]
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. தாளாளர் விஜயன் தலைமை தாங்கினார். முதல்வர் முனைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கமலாதேவி பங்கேற்றார். மாணவிகளுக்கு குற்றப்பிரிவு விழிப்புணர்வு பற்றியும் தற்காப்புகலை மற்றும் தன்னம்பிக்கை பற்றியும் பேசினார். தொடர்ந்து கலை இலக்கிய போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கினார். விழா தொடக்கத்தில் பேராசிரியை சத்யா வரவேற்று பேசினார். முடிவில் உதவிப்பேராசிரியை […]
பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். இவர் தமிழில் பிரகாஷ் ராஜ் நடித்த ‘தோனி’ படத்தின் மூலம் அறிமுகமானார். “ரத்த சரித்தரம், ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், ‘கபாலி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சிஸ்டர் மிட்நைட்’. கரண் கந்தாரி இயக்கிய இப்படத்தை அலாஸ்டர் கிளார்க் மற்றும் அன்னா கிரிபின் ஆகியோர் தயாரித்துள்ளனர். […]
பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடேர்த்தே. இவர் 2016 முதல் 2022 வரை பிலிப்பைன்ஸ் அதிபராக செயல்பட்டார். அதற்குமுன் 2011ம் ஆண்டு டவொவா மாகாண மேயராகவும் அவர் செயல்பட்டார். இதனிடையே, மேயர், அதிபராக இருந்த கால கட்டத்தில் போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக ரோட்ரிகோ டுடேர்த்தே கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் என பலர் கொல்லப்பட்டனர். இதில் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை தொடர்பாக மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ரோட்ரிகோ டுடேர்த்தேவுக்கு எதிராக ஐ.நா. […]
தற்போது படிப்படியாக விவசாய நிலங்களும் விவசாய சாகுபடி குறைந்த நிலையில் கால்நடைகளுக்கு குறிப்பாக கறவை மாடுகள் , கோழிகளுக்கு பசுந்தீவன பற்றாக்குறையாக எற்பட்டு வருகிறது என்ன தான் கலப்பு தீவனங்கள் கொடுத்தாலும் அந்த வகையில் இரசாயன உரமில்லாத புரத சத்து அதிகமாக உள்ள மாற்று தீவனமாக அசோலா உள்ளது. இது எளிய முறையில் விவசாயிகள் குறுகிய இடத்தில உற்பத்தி செய்யலாம்.அதுமட்டுமல்ல நெல் நடவு பயிருக்கு சிறந்த இயற்கை உரமாக பயன்படுவதுடன் காற்றில் உள்ள நைட்டிஜனை கிரகிக்கும் […]
தூத்துக்குடியில் நாளை மறுநாள் 14ம் தேதி வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கூறி இருப்பதாவது:- “வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரதி மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை […]
தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி சார்பில் நல உதவிகள் வழங்கும் விழா கோவில்பட்டி காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது. 72 விவசாய தொழிலாளர்களுக்கு வேட்டி, சேலை,10 கிலோ அரிசிப்பை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. கோவில்பட்டி நகர்மன்ற தலைவரும் நகரச் செயலாளருமான கருணாநிதி தலைமை தாங்கி நல உதவிகளை வழங்கினார். வடக்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளரும் 14வது வார்டு […]







