கோவில்பட்டியில் திமுக கண்டன பொதுக்கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக இந்தி திணிப்பு,நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் கோவில்பட்டி கடலையூர் ரோடு லாயல் மில் காலனிபகுதியில் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் பாரதி,ராதாகிருஷ்ணன்,ஜோசப்அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார்.
மாநில மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, இளம் பேச்சாளர் உமாராணி, கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் கணேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
கோவில்பட்டி நகர செயலாளர் கருணாநிதி,தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,பொதுக்குழு உறுப்பினர்கள் சிவா, ரமேஷ், கயத்தாறு மத்திய ஒன்றிய செயலாளர் கருப்பசாமி,விவசாய அணி அமைப்பாளர் சந்தானம்,அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன்,
மாவட்ட இலக்கிய அணி தலைவர் சோழப்பெருமாள்,மாவட்ட பிரதிநிதிகள் அசோக்குமார், முருகன்,தங்கச்சாமி, ஒன்றிய அவைத்தலைவர் பொன்னுச்சாமி, ஒன்றிய துணைச் செயலாளர் சின்னத்தாய், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் உத்ரகுமார் நன்றி கூறினார்
