கலை, இலக்கிய போட்டி: கல்லூரி மாணவிகளுக்கு பரிசு

கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. தாளாளர் விஜயன் தலைமை தாங்கினார். முதல்வர் முனைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கமலாதேவி பங்கேற்றார். மாணவிகளுக்கு குற்றப்பிரிவு விழிப்புணர்வு பற்றியும் தற்காப்புகலை மற்றும் தன்னம்பிக்கை பற்றியும் பேசினார். தொடர்ந்து கலை இலக்கிய போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கினார். விழா தொடக்கத்தில் பேராசிரியை சத்யா வரவேற்று பேசினார். முடிவில் உதவிப்பேராசிரியை சித்ரா நன்றி கூறினார்.
