கால்நடைகளுக்கு ஏற்ற தீவனம் `அசோலா’ -உற்பத்தி செய்வது எப்படி?

தற்போது படிப்படியாக விவசாய நிலங்களும் விவசாய சாகுபடி குறைந்த நிலையில் கால்நடைகளுக்கு குறிப்பாக கறவை மாடுகள் , கோழிகளுக்கு பசுந்தீவன பற்றாக்குறையாக எற்பட்டு வருகிறது
என்ன தான் கலப்பு தீவனங்கள் கொடுத்தாலும் அந்த வகையில் இரசாயன உரமில்லாத புரத சத்து அதிகமாக உள்ள மாற்று தீவனமாக அசோலா உள்ளது.
இது எளிய முறையில் விவசாயிகள் குறுகிய இடத்தில உற்பத்தி செய்யலாம்.அதுமட்டுமல்ல நெல் நடவு பயிருக்கு சிறந்த இயற்கை உரமாக பயன்படுவதுடன் காற்றில் உள்ள நைட்டிஜனை கிரகிக்கும் ஆற்றல் இந்த அசோலா வுக்கு உண்டு. ஒரு ஏக்கர் நெல்பயிருக்கு 200. கிலோ வரை இடலாம்.
அசோலா உற்பத்தி செய்தல்
இது கிராமப்புறங்களில் மூக்குத்தி, கம்மல் பாசி என்று அழைக்கப்படுகின்றன.,இது பெரணி வகையை சேர்ந்த தாவரம்.அதிக ஆழமில்லாத நீர் தேங்கும் குட்டைகள் சிமெண்ட் தொட்டிகள் , சில்பாலின் சீட் விரிக்க பட்ட படுகைகளில் எளிதாக உற்பத்தி செய்ய லாம்.
10அடி நீளம்× 2அடி அகலம் × 1அடி ஆழம் கொண்ட சிமெண்ட் தொட்டிகளில் 25-30கிலோ மணல் ( போர் மண்) பரப்பி அதனுடன் 5கிலோ பசுந்சாணத்தை கலக்க வேண்டும்.சூப்பர் பாஸ்பேட் உரம் இருந்தால் 500கிராம் கலக்கலாம் நீரின் அளவு 5செ.மீ இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.அதில் 5கிலோ அசோலா வை இட்டுபரப்பி விடவேண்டும்
இரண்டு வாரங்களில் 40-50கிலோ வரை அசோலா அறுவடைசெய்ய லாம்.அசோலா வழங்குவதால், கறவை மாடுகளின் பால் உற்பத்தி திறன் 15-20% அதிகரிக்கும் கோழிகளுக்கு வழங்கினால், குறிப்பிட்ட காலத்திற்குள் எடை அதிகரிக்கும்.
முதலில் அசோலா மாடுகள் சாண வாடை அடிப்பதால் எடுத்தவுடனே உண்ணாது.அவற்றை நல்ல தண்ணீரில் அலசி , சிறிதளவு நாட்டு சர்க்கரை கலந்து புரட்டு கொடுத்தால் உண்ண தொடங்கும்.ஓரு கிலோ அசோலா மாடுகளுக்கு கொடுத்தால் ஓரு கிலோ பிண்ணாக்கு கொடுப்பதற்கு சமமாகும் இதுவரை 5 லிட்டர் பால் கொடுக்கும் மாடுகள் அசோலா உண்டபின் கூடுதலாக ஓருலிட்டர் (6) லிட்டர் தருவதுவதுடன் பாலின் தரமும் நன்றாக இருக்கும் என தரவுகள் கூறுகின்றன.
அசோலாவில் உள்ள சத்துகள்
இதில்25-30% புரத சத்தும் கால்நடைகளுக்கு தேவையான 7 அமினோ அமிலங்களும், தாதுஉப்புகளும் விட்டமின்கள் உள்ளன.இதை பசுந்தீவன மாகவோ அல்லது உலர் தீவனமாக வோ கொடுக்கலாம்.
இதனை உட் கொண்ட கோழி முட்டையின் எடை அல்புமின் , குளோபுலின் மற்ற முட்டைகளை விட அதிகமாக இருப்பதுடன் நோய் எதிர்ப்பு திறன் உண்டாகும்.
எனவே ஒருங்கிணந்த பண்ணையத்தில் அனைத்து விவசாயிகளும் அசோலா வளர்க்க முன்வர வேண்டும் குறைந்த செலவில் அதிகமான சத்துகள் உள்ளடக்கிய அசோலா வை தீவனமாக கொடுப்பதால் விவசாயிகளுக்கு ஏகப்பட்ட லாபம் கிடைக்கும்.இடம் இல்லாத விவசாயிகள் கூட சில்பாலின் பெட் மூலமாக வளர்க்க லாம்.இது தொழிலாக வும் தொடங்கலாம்.
அக்ரி சு.சந்திர சேகரன் வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை
\
