கோவில்பட்டியில் திமுக சார்பில் நல உதவிகள்

தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி சார்பில் நல உதவிகள் வழங்கும் விழா கோவில்பட்டி காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது.
72 விவசாய தொழிலாளர்களுக்கு வேட்டி, சேலை,10 கிலோ அரிசிப்பை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
கோவில்பட்டி நகர்மன்ற தலைவரும் நகரச் செயலாளருமான கருணாநிதி தலைமை தாங்கி நல உதவிகளை வழங்கினார்.
வடக்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளரும் 14வது வார்டு நகர்மன்ற உறுப்பினருமான தவமணி ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்கு
மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் முன்னிலை வகித்தார்
திமுக பொதுக்குழு உறுப்பினர் ராமர், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ், மாவட்ட திமுக பிரதிநிதி மாரிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
