தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை; உப்பு உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி நேற்று அதிகாலை தூத்துக்குடியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்து இருந்தது. இந்நிலையில்
அதனபடி நேற்று அதிகாலையில் இருந்து தூத்துக்குடியில் கன மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இதே போல் மழை பெய்தது. கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் காலை நேரத்தில் சாரல் மழை மட்டுமே பெய்தது. வானம் மேகம் சூழ்ந்து காணப்பட்டது.
அதன்பிறகு பகல் நேரத்தில் அவ்வப்போது கன மழை சிறிது நேரம் பெய்து விட்டு ஓய்ந்து விட்டது. ஆனால் தூத்துக்குடியில் கன மழை பெய்தது. இதன் காரணமாக காரணமாக முக்கிய தொழிலாளன உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டது,..
சில நாட்களுக்கு முன்புதான் தூத்துக்குடி உப்பளங்களில் உப்பு உற்பத்தி தொடங்கியது. கடந்த வாரம் பெய்த மழை காரணமாக ஏற்கனவே உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று பெய்த மழை காரணமாக உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் உப்பள தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் பொதுத் தேர்வு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட வில்லை. இதனால் ஒரு சில ஊர்களில் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே பள்ளிக்குச் சென்றனர்.
