\கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.60 ஆயிரத்தை கடந்த நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே வந்து, கடந்த 5-ந்தேதி ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,060-க்கும், ஒரு பவுன் ரூ.64,480-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத […]
தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் ஸ்ரீலீலா, சமீபகாலமாக பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி, ஸ்ரீலீலா, கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக ஒரு திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இதுவரை எதுவும் வெளியாகவில்லை. சமீபத்தில், இவர் நடிகர் இப்ராகிம் அலி கானுடன் மும்பையில் காணப்பட்டார். இது அவரது பாலிவுட் அறிமுகம் பற்றிய வியூகங்களை மேலும் அதிகரித்திருக்கிறது. இதனால் ஸ்ரீலீலாவின் பாலிவுட் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலீலாவுக்கு […]
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’96’. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சி பிரேம்குமார். அதனைத்தொடர்ந்து, சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற மெய்யழகன் படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில், மலையாள சினிமாவின் ஜாம்பவான்களான மம்முட்டி மற்றும் மோகன்லாலுடன் இணைந்து பணியாற்ற விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “மம்முட்டி சார், மோகன்லால் சார் ஆகியோரது படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். இருவருடனும் படம் பண்ண வேண்டும் என்பதுதான் எனது லட்சியம், […]
தமிழ் சினிமாவில் 80 களின் இறுதியில் அறிமுகம் ஆகி 90 களிலும் 2000 களின் தொடக்கத்திலும் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் தேவா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள தேவா. தற்போதும் இவருடைய பாடல்கள் படங்களில் பயன்படுத்தப்படுகின்றன. காப்பி ரைட்ஸ் விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வரும்நிலையில், தன்னுடைய பாடல்களை பயன்படுத்தினால் அதற்காக காப்பி ரைட்ஸ் கேட்கப்போவதில்லை என இசையமைப்பாளர் தேவா தெரிவித்திருக்கிறார். ஊடகம் ஒன்றில் பேசிய அவர் […]
நம்முடைய நாட்டிலே காணப்படும் 15400 வரை வண்டு ( BEETELS) இனங்களில் மக்களுடன் கடந்த 40ஆண்டுக்கு முன்பு வரை மிக நெருக்கமாக இருந்தவை – பொன் வண்டுகள் கிராமப்புற காடுகளில் மழைக்கால ங்களில் இலந்தை மரச் செடி அருகே கூட்டமாக கூட்டமாக காணப்படும். இது மழைகாலங்களில் அதிகமாக காணப்படும்.இதனுடைய அறிவியல் பெயர் STERNOCERA கடந்த 40ஆண்டுகளுக்குமுன்பு வரை பள்ளிபருவத்தில், இலந்தைபழம் சாப்பிடாத, பொன் வண்டுகள் பிடித்து விளையாடாதவர்கள் யாரும் இருக்க மாட்டாங்க. அதனுடைய மேல் ஓடு பளபளப்பாக தங்கம் […]
சிவாஜியின் “பராசக்தி” படத்தின் பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் போஸ்டர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனின் 25-வது படத்தை பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘பராசக்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல, அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் 25-வது படத்திற்கு தமிழில் ”சக்தித் திருமகன்’ எனவும் தெலுங்கு மொழியில் ‘பராஷக்தி’ எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிவாஜியின் பட தலைப்பை பயன்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். […]







