அழிந்து வரும் பொன் வண்டுகள்

 அழிந்து வரும் பொன் வண்டுகள்

நம்முடைய நாட்டிலே காணப்படும் 15400 வரை வண்டு ( BEETELS) இனங்களில் மக்களுடன் கடந்த 40ஆண்டுக்கு முன்பு வரை மிக நெருக்கமாக இருந்தவை – பொன் வண்டுகள்

கிராமப்புற காடுகளில் மழைக்கால ங்களில் இலந்தை மரச் செடி அருகே கூட்டமாக கூட்டமாக  காணப்படும். இது மழைகாலங்களில் அதிகமாக காணப்படும்.இதனுடைய அறிவியல் பெயர் STERNOCERA

கடந்த 40ஆண்டுகளுக்குமுன்பு வரை பள்ளிபருவத்தில், இலந்தைபழம் சாப்பிடாத, பொன் வண்டுகள் பிடித்து விளையாடாதவர்கள் யாரும் இருக்க மாட்டாங்க. அதனுடைய மேல் ஓடு பளபளப்பாக தங்கம் போல மின்னுவதால் அதற்கு பொன்வண்டு என பெயர் வந்தது போல 

அந்த அளவுக்கு இலந்தைபழமும் பொன்வண்டுகளும் பிரசித்திபெற்றவை என்பதை அந்த கால குழந்தைகள் ( இன்றைய முதியவர்கள்) நினைத்து பார்த்து மகிழ்வை எண்ணி பார்க்கிறேன்.

அவ்வளவு ஆனந்த மா?

பொன்வண்டுகளும் இலந்தை மரங்களும் – இன்றைய நிலை ?

பொதுவாக பொன்வண்டுகள் இலந்தை மரங்கள் உள்ள இடங்களில் தவறாமல் காணப்படும்.

இலந்தை செடிகள் வறண்ட பகுதியில் வளரக்கூடிய வை அவை களின் பழங்களை தின்ன தின்ன ஆசையாக இருக்கும்

பள்ளிக்கூட வாசலில் இலந்தைபழங்களை விற்கும் பாட்டிகளிடம் கூட்டமாக கூட்டமாக சிறுவர்கள் அலைபோதும் காட்சி இன்றும் 60 வயதை கடந்தவர்களுக்கு நினைவு இருக்கும்..!

இந்த இலந்தை செடி அதிக வறட்சியை தாங்கி வளர்க்க வை இன்றைய சூழலில் நகரமயமாதல், காலநிலை மாற்றங்களில் குறைந்து வருகின்றன  அந்த காலத்துல இலந்தை முள் யை வேலியாக பயன்படுத்த படுவார்கள். சில கோவிலில் கூட இது ஸ்தல விருட்ஷமாக இருக்கிறது.

இலந்தை பழங்கள் பிஞ்சிலேயே உதிரும் அதிக முள் இருக்கும் என்பதால் பெரும்பாலான வனவிலங்குள் ( மாடு நரி பன்றி) 

அண்டாது. ஆனால் பொன் வண்டுகள் அதனுடைய இலையை விரும்பி சாப்பிடும்.

பொன் வண்டுகள் பார்ப்பதற்கு பளபளப்பாக வும் மினுமினுப்பாகவும் ஜொலிக்க கூடியவை.

சிறுவர்கள் அதனை பிடித்து தீப்பெட்டியில் அடைத்து விளையாடி மகிழ்வார்கள்.அதனுடைய தலைப்பகுதி யின் பின்புறம் மின்னும் தன்மையுடன் வெளிர் பச்சை நிறத்தில் காணப்படும்.

இன்றைய சூழலில் இலந்தைசெடிகள் குறைய குறைய ( களைக்கொல்லியின் பயன்பாடு) பொன் வண்டுகளும் படிப்படியாக குறைந்த வருகின்றன.

இன்றைய தினத்தில் கிராமப்புற ங்களில் பொன்வண்டு களைபார்ப்பது அரிதாக உள்ளது  எனவே அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் இது வண்டு இனமாக இருந்தாலும் உயிரியல் வகைப்பாட்டில் விலங்கு  பட்டியலில் உள்ளது.சில சமயங்களில் கொடிக்கா புளி மரங்களில் கூட காணப்படும்.

அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *