அதிரடியாக குறைந்த தங்கம் விலை
\கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.60 ஆயிரத்தை கடந்த நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே வந்து, கடந்த 5-ந்தேதி ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை பதிவு செய்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,060-க்கும், ஒரு பவுன் ரூ.64,480-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.
இந்த நிலையில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைந்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.960 குறைந்து ரூ.63,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.
.தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,940-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், தொடர்ந்து 7-வது நாளாக நேற்றும் மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.107-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது..
கோவில்பட்டியிலும் நேற்று தங்கம் அதிரடியாக விலை குறைந்து சென்னை விலையிலேயே விற்பனையானது.. இதே போல் வெள்ளியும் அதே விலையில் விற்பனை ஆனது.







