சிவாஜியின் “பராசக்தி” படத்தின் பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் போஸ்டர்
![சிவாஜியின் “பராசக்தி” படத்தின் பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் போஸ்டர்](https://tn96news.com/wp-content/uploads/2025/02/e353eaaa-5590-45c2-9883-83630891294d-850x560.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2025/02/21a686ad-731c-4875-a0a6-963efc65afd5-1024x371.jpeg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனின் 25-வது படத்தை பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘பராசக்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
அதேபோல, அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் 25-வது படத்திற்கு தமிழில் ”சக்தித் திருமகன்’ எனவும் தெலுங்கு மொழியில் ‘பராஷக்தி’ எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சிவாஜியின் பட தலைப்பை பயன்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பராசக்தி பெயரை மீண்டும் படங்களுக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை நகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
‘நூறு ஆண்டுகள் ஆனாலும் ஒரே பராசக்திதான்’ என அந்த போஸ்டரில் நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்கள் எழுதி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)