கல்லூரி மாணவர்களிடம் ஆங்கில பேச்சுத்திறனை வளர்ப்பதற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் புரொஜக்ட் பஞ்ச் திட்டத்தின் மூலம் ஸ்போக்கன் இங்கிலிஷ் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 நாட்கள் நடந்த பயிற்சியில் புரொஜ்க்ட் பஞ்ச் சேர்மன் சியாம் ராஜ் தலைமையில் ஆங்கில வள பயிற்றுனர்கள் எஸ்தர், மகிமாரானா, கிருஷ்ண வேணி, பியூலா கிறிஸ்டி, லாவண்யா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. […]
கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியர்கள் சங்க 38-ம் ஆண்டு விழா நடந்தது. சங்கத் தலைவர் ராஜாமணி தலைமை தாங்கினார். செயலாளர் கேசவன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் விஜயன் வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் ஜவகர் விழாவை தொடங்கி வைத்து பேசினார். விழாவில், முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு,கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க நிறுவனர் மாயவன், […]
கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக திரைத்துறையில் பணிபுரிந்து வருபவர் பிரபு தேவா. இவரின் நடனத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் அவ்வப்போது நடன நிகழ்ச்சி நடத்துவதுண்டு. அந்தவகையில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை நடிகர் பிரபு தேவாவின் நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரபு தேவாவின் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக பிரபல நடிகை சிருஷ்டி டாங்கே பதிவிட்டுள்ளார். […]
‘லவ் டுடே’ படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன். இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘டிராகன்’ படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான […]
மாதந்தோறும் வரும் சிவராத்திரி மிகவும் விசேஷமானது. அதிலும் மாசி மாதத்தில் வரும் மஹா சிவராத்திரி இன்னும் விசேஷமானது. பிற மாதங்களில் வரும் சிவராத்திரியின்போது விழித்திருந்து இறைவனை வழிபடாதவர்கள் இந்த மாசி மாத மஹா சிவராத்திரி நாளில் வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் சிவராத்திரி வழிபாடு செய்த பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், வரும் 26.2.2025 புதன்கிழமை அதாவது மாசி 14ஆம் தேதியன்று அனைத்து சிவாலயங்களிலும் மஹா சிவாராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். குறிப்பாக மஹா சிவராத்திரி நாளில் […]
( முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், = இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் .பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில், நேற்று முதல் 2026 பிப்ரவரி 19ஆம் தேதி வரையிலான 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 பேர்களுக்கு, வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” என்ற இந்த திட்டத்தை நேற்று சென்னை கொளத்தூர், அகரம், ஜெகநாதன் சாலையில் உள்ள “முதல்வர் படைப்பகம்” அருகில் […]
கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்து வழிபட்ட பிறகு, இறைனின் சன்னதியை வலம் வருவது வழக்கம். பெரும்பாலானவர்கள் நேரமில்லை என சொல்லி இறைவனை மட்டும் தரிசனம் செய்து விட்டு வெளியே சென்று விடுவார்கள். ஆனால் கோவிலை வலம் வருவது மிக முக்கியமானதாகும். அப்படி வலம் வரும் போது, மனதார இறைவனை நினைத்தபடி வலம் வந்தால் மனதில் உள்ள தீய எண்ணங்கள் நீங்கி, இறைவனிடம் இருந்து வெளிப்படும் நேர்மறை ஆற்றல்களால் நம்முடைய மனது சுத்தமாகும். நேர்மறையான ஆற்றல்கள் பெருவதால் நன்மைகள் […]
அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘மைக்கேல் முசாசி’. ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். சவாலான போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை. இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, மலையாள நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் […]