மாசி மாதத்தில் மஹா சிவராத்திரி

மாதந்தோறும் வரும் சிவராத்திரி மிகவும் விசேஷமானது. அதிலும் மாசி மாதத்தில் வரும் மஹா சிவராத்திரி இன்னும் விசேஷமானது. பிற மாதங்களில் வரும் சிவராத்திரியின்போது விழித்திருந்து இறைவனை வழிபடாதவர்கள் இந்த மாசி மாத மஹா சிவராத்திரி நாளில் வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் சிவராத்திரி வழிபாடு செய்த பலன்கள் கிடைக்கும்.
அந்த வகையில், வரும் 26.2.2025 புதன்கிழமை அதாவது மாசி 14ஆம் தேதியன்று அனைத்து சிவாலயங்களிலும் மஹா சிவாராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். குறிப்பாக மஹா சிவராத்திரி நாளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் சிவாலய ஓட்டம் உலக பிரசித்தி வாய்ந்தது.
அமாவாசை தினங்கள் அனைத்தும் முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த நாட்களே. மாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் புண்ணிய பலனை தரக்கூடியது. அதன்படி மாசி 15ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை (27.2.2025) மாசி மாத அமாவாசை வருகிறது.
மண்டைக்காடு கொடை அல்லது திருவிழா பிரபலமான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு என்னும் ஊரில் அமைந்துள்ளது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் மாசி கொடை திருவிழா 2025 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 11 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வுகளில், மார்ச் 7 ஆம் தேதி மஹாபூஜை மற்றும் மார்ச் 12 ஆம் தேதி வலிய சக்கர தீவட்டி ஊர்வலம் இடம்பெறும்.
இந்த திருவிழா, மாசி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
மாசி மகம், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் கடல், ஆறு, நதி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவார்கள்.
